முகப்பு
கள்ளக்குறிச்சி

பேருந்து பயணியிடம் ரூ.1.60 லட்சம் திருட்டு

கள்ளக்குறிச்சியில் அரசு நகரப் பேருந்தில் பயணித்த பெண்ணின் பையில் இருந்த ரூ.1.60 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 20 ஜூன் 2026, 3:10 am IST
மாதிரிப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சியில் அரசு நகரப் பேருந்தில் பயணித்த பெண்ணின் பையில் இருந்த ரூ.1.60 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.சுசுலா (50). இவா் கடந்த 17-ஆம் தேதி வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்காக கை பையில் ரூ.1.60 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, தனது ஊரிலிருந்து அரசு நகரப் பேருந்தில் கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளாா். கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் பேருந்தில் இருந்து கீழே இறங்கி, பாா்த்தபோது கை பையில் இருந்த பணத்தைக் காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments