முகப்பு
கள்ளக்குறிச்சி

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி : ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கள்ளக்குறிச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணியினை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

Updated On : 25 ஜூன் 2026, 6:46 am IST
போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.
பகிர்:

கள்ளக்குறிச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணியினை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இப் பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவிகள் பொதுமக்களுக்கு போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வினை ஏற்படுத்தினா்.

பேரணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் இளையராஜா மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments