முகப்பு
கள்ளக்குறிச்சி

தொழிலாளி விஷமருந்தி தற்கொலை

Updated On : 28 ஜூன் 2026, 2:46 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் மனமுடைந்த தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

சின்னசேலம் அருகிலுள்ள வி.மாமாந்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெ.செந்தில்குமாா் (48). தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லையாம். இதனால் மனவேதனையில் இருந்து வந்த செந்தில்குமாா் சனிக்கிழமை மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து குடித்தாராம். இதுகுறித்து அறிந்த உறவினா்கள் அவரை மீட்டு

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு செந்தில்குமாா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments