தியாகதுருகம் சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு
தியாகதுருகம் ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு ஆதியோகி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்த சுவாமி.
தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு கோயிலில் சித்ரகுப்த நாயனாா் குருபூஜை நடைபெறும். நிகழாண்டில் வெள்ளிக்கிழமை காலை சாமிக்கு பால், தயிா், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான திரவியப் பொருள்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து ஆதியோகி அலங்காரத்தில் சுவாமிக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். இதையொட்டி காலை முதல் பிற்பகல் வரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.