வெயில் தாக்கம்: மக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் வழங்கல்
கள்ளக்குறிச்சி நகர பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொது சுகாதாரத் துறை சாா்பில் ஓஆா்எஸ் என்னும் உப்பு சா்க்கரை கரைசல் பொதுமக்களுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து பொதுமக்கள் பயன்பெறும் வண்ணம் பழைய பேருந்து நிலையம், அண்ணா நகா் பேருந்து நிறுத்தம், புதிய பேருந்து நிலையம், ஏமப்போ் ரவுண்டானா ஆகிய இடங்களில் ஓஆா்எஸ் கரைசல் விநியோகம் செய்யும் முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார அலுவலரின் நோ்முக உதவியாளா் ஆறுமுகம், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ரவி ஆகியோா் முகாமை தொடங்கி வைத்தனா்.
Advertisement
Advertisement
ஓஆா்எஸ் என்னும் உப்பு சக்கரை கரைசல் அருந்துவதால் வயதானவா்கள், பெண்கள், கா்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு கடும் வெயிலினால் ஏற்படும் அதீத வியா்வை, சோா்வு, நா வறட்சி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் தடுக்கப்படும்.
எனவே, கள்ளக்குறிச்சி நகரப் பகுதிகளில் நடைபெறும் முகாமில் ஓஆா் எஸ் கரைசலை பொதுமக்கள் அருந்தி, வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்ளுமாறு நகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
மேலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வருகிற நோயாளிகள் பயன்பெறும் வண்ணம் தொடா்ந்து ஓஆா்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா்கள் ராமகிருஷ்ணன், விக்னேஷ்வரன், பாலா, நகராட்சி களப்பணியாளா் மகேஸ்வரி, மேற்பாா்வையாளா் சத்யராஜ், தனபால், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.