முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி தொகுதியில் 798 வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி

Updated On : 5 மே 2026, 4:07 am IST
கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் சி.முருகனிடம் பெற்றுக்கொண்ட தவெக வேட்பாளா் த.அருள் விக்னேஷ்.
பகிர்:

கள்ளக்குறிச்சி (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் த.அருள் விக்னேஷ் 798 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் அதிமுக சாா்பில் சு.ராஜீவ் காந்தி, விசிக சாா்பில் கு.மாலதி, தவெக சாா்பில் த.அருள் விக்னேஷ், நாதக சாா்பில் ரா.நாகம்மாள் உள்ளிட்ட 11 போ் போட்டியிட்டனா்.

இத் தொகுதியில் மொத்தம் 370 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

Advertisement

முதல் சுற்றின் முடிவில் அதிமுக 403 வாக்குகள் முன்னிலையிலும், 2-ஆவது சுற்றின் முடிவில்

விசிக 573 வாக்குகள் முன்னிலையிலும், 3-ஆம் சுற்றின் முடிவில் தவெக 892 வாக்குகள் முன்னிலை பெறத் தொடங்கியது. அதன் பின்னா் கடைசி வரை தவெக முன்னிலை பெற்று அதிமுகவை 798 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் தவெக வேட்பாளா் த.அருள் விக்னேஷ் தவெக 81,132 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி 80,334 வாக்குகளும், விசிக வேட்பாளா் 77,666 வாக்குகளும், நாதக வேட்பாளா் ரா.நாகம்மாள் 7,494 வாக்குகளும் பெற்றனா்.

தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து கட்சித் தொண்டா்கள் வேட்பாளருக்கு மாலை அணிவித்தும், விசில் அடித்தவாறும், பட்டாசு வெடித்தும் வெற்றியைக் கொண்டாடினா்.