முகப்பு
புதுச்சேரி

நெட்டப்பாக்கம் போலீஸாருக்கு டிஜிபி பாராட்டு

நாட்டின் சிறந்த காவல் நிலையங்களில் 4-ஆவது  இடத்தைப் பிடித்த புதுவை நெட்டப்பாக்கம் காவல் நிலைய போலீஸாருக்கு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சுந்தரி நந்தா இனிப்பு வழங்கி பாராட்டினார்.

Updated On : 25 டிசம்பர் 2018, 9:30 am IST
பகிர்:

நாட்டின் சிறந்த காவல் நிலையங்களில் 4-ஆவது  இடத்தைப் பிடித்த புதுவை நெட்டப்பாக்கம் காவல் நிலைய போலீஸாருக்கு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சுந்தரி நந்தா இனிப்பு வழங்கி பாராட்டினார்.
நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் புதுவை மாநிலத்தின் நெட்டப்பாக்கம் காவல்நிலையம் நான்காம் இடத்தை வகிக்கிறது.
 இந்த நிலையில், மாநில காவல்துறை தலைமை இயக்குநர் சுந்தரி நந்தா திங்கள்கிழமை நெட்டப்பாக்கம் காவல்நிலையம் சென்று பார்வையிட்டார். அப்போது, காவல் அதிகாரிகளையும், காவலர்களையும் பாராட்டிய அவர், அவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
 தொடர்ந்து செய்தியாளர்களிடம் டிஜிபி சுந்தரி நந்தா கூறியதாவது: 
நாட்டின் சிறந்த காவல் நிலையங்களில் 4-ஆவதாக நெட்டப்பாக்கம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டிருப்பது நமது மாநிலத்துக்கு கிடைத்த கெளரவம். 
மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் தேவைகளை நிறைவு செய்ய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments