முகப்பு
புதுச்சேரி

மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்க ஆண்டு விழா

 பாண்டிச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வுச் சங்கத்தின் 20-ஆவது ஆண்டு விழா புதுச்சேரி லாஸ்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 டிசம்பர் 2018, 9:31 am IST
பகிர்:

 பாண்டிச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வுச் சங்கத்தின் 20-ஆவது ஆண்டு விழா புதுச்சேரி லாஸ்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்த சட்டப்பேரவைத் தலைவர் 
வெ. வைத்திலிங்கம், சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பை நல்கிய மூத்த குடிமக்களுக்கு பரிசுகள் கெளரவித்தார். விவேகானந்தா மேல்நிலைப் பள்ளித் தாளாளரும், எம்எல்ஏவுமான எஸ். செல்வகணபதி, மூத்த குடிமக்களின் பேரக் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். பாண்கேர் செயலாளர் பி. பத்மநாபன், பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மூத்த குடிமக்களின் பேரக்  குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
இதில் பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் குறித்து முன்னாள் நீதிபதி டி. ராமபத்திரன் பேசினர். முதியோர்கள் பிரச்னை தலைமுறை இடைவெளியா அல்லது தகவல் இடைவெளியா என்ற தலைப்பில்  மருத்துவர் டி.எல். வாசுதேவன் பேசினார்.
இதில் டிஐஜி வி.ஜெ.சந்திரன், புதுவை தமிழ்ச்சங் க தலைவர் வி. முத்து, புதுவை சமூகநலத்துறை இயக்குநர் கே. சாரங்கபாணி, கவிதை வானில் கவி மன்றத்தின் தலைவர் கலாவிசு, மூத்த குடிமக்கள் நலவாழ்வுச் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments