மேக்கேதாட்டு அணை விவகாரம்
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை 4 மாநில அரசுகளும் ஏற்க வேண்டும் என்று கர்நாடக மாநில எம்.பி சையது நசீர் உசேன் தெரிவித்தார்.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை 4 மாநில அரசுகளும் ஏற்க வேண்டும் என்று கர்நாடக மாநில எம்.பி சையது நசீர் உசேன் தெரிவித்தார்.
ரஃபேல் போர் விமானம் விவகாரம் தொடர்பாக புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ரஃபேல் போர் விமானம் விவாகரத்தில் 126 ஜெட் விமானங்கள் வாங்க திட்டமிட்டு 36 வாங்க பணம் தந்துள்ளனர். அதில் 126 வாங்கியிருக்க முடியும். வரிப் பணம் தொடர்பான விவரத்தை அறிய மக்களுக்கு உரிமை உண்டு. இந்த விமானம் வாங்க ஒப்பந்தம் செய்ததில் தவறில்லை என பாஜகவும், அவர்களின் ஆதரவு தரப்புகளும் மட்டுமே கூறிக்கொள்கின்றன.
பங்குச் சந்தையில் தனியார் நிறுவனத்தின் பங்குகளை அதிகரித்து வாங்கியுள்ளனர். இதில் கண்டிப்பாக பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை. தேசப் பாதுகாப்புக்கு இது உண்மையில் அச்சுறுத்தல் உள்ளது என்றார் அவர்.
அதைத் தொடர்ந்து மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், தண்ணீர் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று.
குடிநீர், விவசாயம், தொழில்சாலை பயன்பாடு உள்ளிட்ட தேவைகளுக்கு ஏற்ப, நீர் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம், புதுவை அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் நான்கு மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேக்கேதாட்டு அணை தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் வெவ்வேறு கருத்துகள் உள்ளன. நீதிமன்ற முடிவே இறுதி செய்ய முடியும் என்றார்.
பேட்டியின்போது, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, பொதுப் பணித் துறை அமைச்சரும், பிரதேச காங்கிரஸ் தலைவருமான ஆ.நமச்சிவாயம் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.