கழிவுநீர் கால்வாயில் குப்பை கொட்டினால் அபராதம்: ஆளுநர் உத்தரவு
கழிவுநீர் கால்வாயில் குப்பை கொட்டினால் திங்கள்கிழமை (நவ. 5) முதல் அபராதம் விதிக்க நகராட்சிகளுக்கு புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
கழிவுநீர் கால்வாயில் குப்பை கொட்டினால் திங்கள்கிழமை (நவ. 5) முதல் அபராதம் விதிக்க நகராட்சிகளுக்கு புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
புதுவை ஆளுநர் மாளிகை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி பணியாளர்கள், பல்நோக்கு ஊழியர்கள், நகராட்சி ஆணையர்கள், துறை இயக்குநர் உள்ளிட்டோருடன் ஆளுநர் கிரண்பேடி கலந்துரையாடினார். இதையடுத்து எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக ஆளுநர் கிரண்பேடி தனது கட்செவி அஞ்சலில் வெளியிட்ட பதிவு:
தற்போது தூர்வாரப்பட்ட கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் செல்கிறது.
கால்வாயில் குப்பை கொட்டினால் திங்கள்கிழமை முதல் அபராதம் விதிக்கலாம். நகராட்சி ஆய்வாளர்கள் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு ஆய்வாளரும் நாள்தோறும் நூறு பேருக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும், குப்பை கொட்டுவோர் மீது அதிகளவு அபராதம் விதிக்க வேண்டும். அப்போதுதான் குப்பை கொட்டுவது பெரிய தவறு என்பதை மக்கள் உணர்வார்கள். இது இறுதி எச்சரிக்கை. இந்த விஷயத்தில் குடியிருப்போர், கடைக்காரர்கள், பொதுமக்கள் தங்களின் சொந்த நலனுக்காக முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கிரண் பேடி தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.