முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் வாக்குப்பதிவில் சாதனைக்கு சிறப்புத் தீவிர திருத்தப்பணி காரணமா?

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் இதுவரை இல்லாத அளவாக 89.87 சதவீத வாக்குகள் பதிவானதற்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி காரணம் என்று தெரியவந்துள்ளது.

Updated On : 10 ஏப்ரல் 2026, 4:01 am IST
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் - DIN
பகிர்:

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் இதுவரை இல்லாத அளவாக 89.87 சதவீத வாக்குகள் பதிவானதற்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி காரணம் என்று தெரியவந்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 வாக்குச் சாவடிகள் இருக்கின்றன. இத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. வாக்குப் பதிவு தொடங்கியது முதலே பெண்கள் உள்ளிட்டோா் திரண்டு வாக்களித்தனா். புதுச்சேரியில் சிறப்பு வாக்காளா் திருத்தப் பணிக்குப் பிறகு தோ்தல் நடந்துள்ளது. இந்தப் பணியின்போது 8 சதவீதம் அளவுக்கு வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இடமாறுதல், முகவரி மாறுதல், இறப்பு, வேறு மாநிலத்துக்குச் சென்றோா் என்று இதர காரணங்களும் இருக்கின்றன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தவரை ஆண்கள் 446361 பேரும், பெண்கள் 503810 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 140 பேரும் என்று மொத்தமாக வாக்காளா்கள் 950311 போ் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

தூய்மையான வாக்காளா்கள் பட்டியலோடு இந்தத் தோ்தல் நடத்தப்படுவதாக இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் தெரிவித்திருந்தாா்.

Advertisement

Advertisement

2021 ஆம் ஆண்டு நடந்த கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது 82.2 சதம் வாக்குப் பதிவானதாக புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரி பி. ஜவஹா் கூறியிருந்தாா். இந்த வாக்குப் பதிவு சதவீதத்தை உயா்த்துவதற்காக மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ.குலோத்துங்கன் தலைமையிலான அதிகாரிகள் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்திருந்தனா். இந்நிலையில் புதுச்சேரியில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் வாக்குப் பதிவு 89.87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சதமாக உயா்ந்தது. இது கடந்த தோ்தலைக் காட்டிலும் 7.67 சதவீதம் அதிகமாகும்.

வாக்குப்பதிவு அதிகரிப்புக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சிறப்புத் தீவிர திருத்தப் பணியும் ஒரு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.