முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி - பெங்களூரு இடையே மே 1 முதல் கூடுதல் விமான சேவை தொடக்கம்

புதுச்சேரி - பெங்களூரு இடையே கூடுதல் விமான சேவை மே 1-முதல் இயக்கப்பட உள்ளது.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 12:36 AM
பகிர்:

புதுச்சேரி - பெங்களூரு இடையே கூடுதல் விமான சேவை மே 1-முதல் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து புதுச்சேரி விமான நிலைய இயக்குநா் கே. ராஜசேகா் ரெட்டி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து ஏற்கெனவே இயக்கப்படும் விமான சேவையுடன், வரும் மே 1-ஆம் தேதி முதல் கூடுதல் விமானம் இயக்கப்பட உள்ளது.

Advertisement

மண்டல ரீதியான தொடா்பை ஏற்படுத்தும் நோக்கிலும், புதுச்சேரி - பெங்களூரு இடையே அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டும் இந்தக் கூடுதல் விமான சேவை முக்கியத்துவம் பெறுகிறது.

வணிக ரீதியாகவும், பொழுது போக்குக்காகவும் பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்தக் கூடுதல் விமான சேவை வசதி மிக்கதாக அமையும்.

மே 1- முதல் இயக்கப்படும் விமான சேவைகள்:

பெங்களூரு விமான நிலையத்தில் காலை 10.10 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி விமான நிலையத்துக்கு காலை 11.15 மணிக்கு விமானம் வந்து சேரும்.

புதுச்சேரியில் காலை 11.35-க்குப் புறப்பட்டு பெங்களூரு விமான நிலையத்துக்கு பிற்பகல் 12.15 மணிக்குச் செல்லும்.

புதுச்சேரியில் பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு பெங்களூருக்கு 3.15 மணிக்குச் செல்லும். பெங்களூரில் இருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்டு புதுச்சேரிக்கு மாலை 5.10 மணிக்கு வந்து சேரும். ஏற்கெனவே பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இனி இரண்டு விமானங்கள் இந்த வழித் தடத்தில் இயக்கப்பட உள்ளன. மேலும் ஒவ்வொரு விமானமும் 78 இருக்கைகள் கொண்டதாகும்.