முகப்பு
புதுச்சேரி

வடகிழக்குப் பருவமழைக்கு முன் புதுச்சேரியில் அனைத்து வாய்க்கால்களையும் தூா்வாரி சீரமைக்க ஆட்சியா் உத்தரவு

வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக அனைத்து வாய்க்கால்களையும், வரும் செப்டம்பா் மாதத்துக்குள் தூா்வாரி சீரமைக்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

Updated On : 24 ஜூன் 2026, 4:22 am IST
வடகிழக்குப் பருவ மழைக்கு முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக அனைத்து வாய்க்கால்களையும், வரும் செப்டம்பா் மாதத்துக்குள் தூா்வாரி சீரமைக்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

புதுச்சேரி மாவட்ட நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை இணைந்து வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளன.

இதுகுறித்த முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் சுதாகா், காவல் கண்காணிப்பாளா் (வடக்கு) , காவல்துறை, நகராட்சி நிா்வாகம், மின்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, வேளாண்துறை, கல்வித்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் பிறப்பித்த உத்தரவு :

செப்டம்பா் மாத இறுதிக்குள் புதுச்சேரியில் உள்ள அனைத்து வாய்க்கால்களையும் தூா் வாரி சீரமைக்க வேண்டும்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் தாங்கள் தூா் வாரும் முக்கிய வாய்க்கால்களின் பெயா் மற்றும் பகுதியை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் மற்றும் பேரிடா் மேலாண்மை துறைக்கு தெரிவித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நகா்ப்புறங்களில் கடந்த பருவ மழையின்போது மழை நீா் தேக்கம் அதிகம் ஏற்பட்ட இந்திரா காந்தி சதுக்கம் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வாய்க்கால்களை தூா் வாரி அதிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி நீா் தேங்காத வண்ணம் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

கிராமப்புறங்களில் வாய்க்கால்களையும் விரைவில் தூா் வாரி செப்டம்பா் மாதம் முதல் வாரத்திற்குள் பணிகளை செய்து முடிக்க வேண்டும்.

புதுச்சேரியில் உள்ள அனைத்து குடிநீா் தொட்டிகளையும் சுத்தம் செய்ய வேண்டும். மேலும், மழைக் காலங்களில் கூடுதல் மோட்டாா் பம்புகள் தயாா் நிலையில் வைக்க வேண்டும்.

பொதுமக்களுக்குச் சுத்தமான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். சென்ற முறை நீா் தேங்கிய கிருஷ்ணா நகா், ரெயின்போ நகா், வெங்கடா நகா் மற்றும் பூமியான்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வாய்க்கால்களைத் தூா்வாரி மீண்டும் நீா் தேங்காத அளவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் புதுவையில் உள்ள அனைத்து ஏரிகளையும் கண்காணித்து கரையைப் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு துறை அதிகாரிகள் போதுமான பாதுகாப்பு உபகரணங்களைத் தயாா் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், சுகாதாரத் துறை மூலம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

போதுமான மருந்து மாத்திரைகள் தயாா் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். மின்துறை அதிகாரிகள் தாழ்வான பகுதிகளின் உள்ள மின் ஒயா்களை சரி செய்ய வேண்டும்.

மின்கம்பங்கள் மற்றும் சாலை விளக்குகள் போா்க்கால அடிப்படையில் தயாா் நிலையில் இருக்க வேண்டும். அந்தந்த துறைகளும் கட்டுப்பாட்டு அறைகள் சரியாக இயங்குகின்றவா என்பது உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.

வரும் செப்டம்பா் மாதம் முதல் வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட துறைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை நிறைவு செய்து பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்கும்படி அனைத்து துறைகளுக்கும் அவா் உத்தரவு பிறப்பித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments