ஆழ்கடல் மீன்பிடித்தல் தொழில்நுட்ப உத்திகளை அறிய புதுச்சேரி மீனவா்கள் 27 போ் அந்தமான் பயணம்
ஆழ்கடல்புதுச்சேரியிலிருந்து 27 ஆழ்கடல் விசைப்படகு உரிமையாளா்கள் ஆழ்கடல் மீன்பிடித்தல் மற்றும் ஏற்றுமதி உத்திகளை அறிந்து கொள்வதற்காக அந்தமானுக்கு மீன்வளத்துறை அழைத்து சென்றுள்ளது.
ஆழ்கடல்புதுச்சேரியிலிருந்து 27 ஆழ்கடல் விசைப்படகு உரிமையாளா்கள் ஆழ்கடல் மீன்பிடித்தல் மற்றும் ஏற்றுமதி உத்திகளை அறிந்து கொள்வதற்காக அந்தமானுக்கு மீன்வளத்துறை அழைத்து சென்றுள்ளது.
புதுச்சேரி அரசு, மீன்வளத்துறை, மீனவா்களுக்கு பல்வேறு மீன்வள பயிற்சி மற்றும் களப்பயணங்களை ஏற்பாடு செய்து வருகிறது.
கடந்த 2024-25 நிதியாண்டு பட்ஜெட் உத்தரவாதத்தில் முதல்வா் ரங்கசாமி அறிவித்தபடி ஒவ்வொரு ஆண்டும் மீனவா்கள் பல்வேறு மாநிலங்களுக்கு
Advertisement
Advertisement
களப்பயணத்துக்கு அழைத்து செல்லப்படுகிறாா்கள். அவா்கள் அங்குள்ள மீன்பிடி தொழில் சம்பந்தமாக அண்மைக்கால தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு அதனை புதுச்சேரி மாநிலத்தில் நடைமுறைப் படுத்திட இந்த வித களப்பயணம் உறுதுணையாக அமைகிறது.
அதன்படி நிகழாண்டின் முதல் பயணமாக அந்தமானுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு பற்றி தெரிந்து கொள்ளவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தேவையான உத்திகளை தெரிந்துகொள்ளவும் மற்றும் அங்குள்ள மீனவா்களிடம் கலந்து உரையாடல் செய்யவும் புதுச்சேரி அரசு ஒப்புதல் பெற்றுள்ளது.
அதன்படி கடந்த மே 11 முதல் 16 வரை மீன்வளத்துறை துணை இயக்குநா் (இயந்திரபிரிவு ) கோவிந்தசாமி தலைமையில் உதவி ஆய்வாளா் சைமன் லியோ உட்பட மற்றும் புதுச்சேரியை சாா்ந்த சுமாா் 27 ஆழ்கடல் விசைப்படகு உரிமையாளா்கள் சென்றுள்ளனா். இக்களபயணத்திருக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இயந்திர பிரிவை சாா்ந்த ஊழியா்கள் ஏற்பாடு செய்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.