ஒப்பந்தத் தொழிலாளர் முறையை கைவிட வலியுறுத்தல்
அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை கைவிட வலியுறுத்தி, சிஐடியூ சார்பில் விழுப்புரத்தில் புதன்கிழமை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை கைவிட வலியுறுத்தி, சிஐடியூ சார்பில் விழுப்புரத்தில் புதன்கிழமை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியூ வடக்கு மாவட்டத் தலைவர் பி.குமார் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.முத்துக்குமரன், பொருளாளர் கே.அம்பிகாபதி, தெற்கு மாவட்டச் செயலர் ஏ.வீராசாமி, பொருளாளர் கே.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிஐடியூ மாநிலச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் சிறப்புரையாற்றினார்.
தொழிற் சங்க நிர்வாகிகள், போக்குவரத்து தொழிற்சங்க பொதுச் செயலர் குமார், பிற சங்க நிர்வாகிகள் வி.உதயகுமார், கே.அண்ணாமலை, கே.தெய்வீகன், ஆர்.ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வேண்டும்.
ஒப்பந்தத் தொழிலாளர் முறையைவிட, குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் ஒப்பந்தப் பணியாளர்களை அமைக்கும் மோசமான சட்டத் திருத்தத்தையும் திரும்பப் பெற வேண்டும்.
முறைசாரா தொழிலாளர் நல வாரியங்களை முடக்கக்கூடாது.
ஆர்ப்பாட்டத்தில், அரசு விதிகள்படி உரிய நிதியை ஒதுக்கி நல வாரியம் மூலம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும்.
கட்டுமானத் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.