முகப்பு
விழுப்புரம்

பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

மயிலத்தை அடுத்த கூட்டேரிப்பட்டில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் எம்.டி. நடுநிலைப் பள்ளியில் 96}ஆவது ஆண்டு விழா, மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:31 am IST
பகிர்:

மயிலத்தை அடுத்த கூட்டேரிப்பட்டில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் எம்.டி. நடுநிலைப் பள்ளியில் 96}ஆவது ஆண்டு விழா, மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் வி.குட்டிபாபு வரவேற்றார்.தாளாளர் அருள் தந்தை எஸ்.நீதிநாதன் தலைமை வகித்தார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பெலிக்ஸ், கோவர்த்தனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, பள்ளியில் நிகழ் கல்வியாண்டில் 5}ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டம், கேடயம், நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர். தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
ஆசிரியர்கள் விஜயலட்சுமி, ஜெயராமன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆசிரியர் எலிசா நன்றி கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments