உளுந்தூர்பேட்டையில் 20 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்
உளுந்தூர்பேட்டை நகரில் குற்றச் செயல்களை தடுப்பதற்காக 20 இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.
உளுந்தூர்பேட்டை நகரில் குற்றச் செயல்களை தடுப்பதற்காக 20 இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட காவல் துறை, ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் உளுந்தூர்பேட்டை நகரில் பேருந்து நிலையம், வங்கிகள், சந்தைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள், அனைத்துத் தெருக்கள் உள்பட 20 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் கட்டுப்பாட்டு அறை பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பதிவாகும் காட்சிகளை அங்கிருந்தபடியே காவலர்கள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பர்.
இந்த கண்காணிப்புக் கேமராக்களை பயன்பாட்டுக்காக வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் பி.நாகராஜ் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், உளுந்தூர்பேட்டை துணை கண்காணிப்பாளர்
பி.ராஜேந்திரன், ரோட்டரி சங்கத் தலைவர் ஜெ.திலீப், முன்னாள் ரோட்டரி சங்க முன்னாள் கவர்னர்கள் வழக்குரைஞர் மு.அன்பழகன், வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஷாகுல் அமீது, போக்குவரத்து ஆய்வாளர் கோவிந்தசாமி, உதவி ஆய்வாளர் செல்வநாயகம் உள்ளிட்ட காவலர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.