முகப்பு
விழுப்புரம்

"பாலியல் குற்றங்கள் தடுப்பு: பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும்'

பாலியல் குற்றங்களில் இருந்து மாணவ, மாணவிகள் தற்காத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் பள்ளி, கல்லூரிகளில் அதிகளவில் நடத்தப்படும் என்று வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜ் கூறினார்.

Updated On : 25 டிசம்பர் 2018, 10:02 am IST
பகிர்:

பாலியல் குற்றங்களில் இருந்து மாணவ, மாணவிகள் தற்காத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் பள்ளி, கல்லூரிகளில் அதிகளவில் நடத்தப்படும் என்று வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜ் கூறினார்.
திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார் (படம்).
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் காவலர்கள் பற்றாக் குறையைக் களைய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். திருக்கோவிலூர் காவல் உள்கோட்ட எல்லையிருந்து பிரித்து புதிதாக சங்கராபுரம் காவல் உள்கோட்ட எல்லையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 திருக்கோவிலூர் பகுதியில் குற்ற சம்பவங்களைத் தடுக்க காலியாக உள்ள குற்றப்பிரிவு ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
சங்கராபுரம் - திருவண்ணாமலை, திருக்கோவிலூர் - சங்கராபுரம் சாலைகளில் மேலும் விபத்துகளை குறைக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
திருக்கோவிலூர் நகர போக்குவரத்துக் காவல் துறைக்கு தற்போதுள்ள காவல் நிலையத்தின் மேல் பகுதியில் புதிதாக கட்டடம் கட்ட நடவடிக்கை எடுப்படும்.
சாராயம் காய்ச்சுவதை முற்றிலும் ஒழிக்கத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சாராயம் காய்ச்சுபவர்கள் மாற்றுத் தொழில் செய்வதற்கு அரசின் மூலம் நிதியுதவி கிடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுப்பார்.
பாலியல் குற்றங்களைக் குறைக்கும் பொருட்டு, பள்ளி, கல்லூரிகளில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு  நிகழ்ச்சிகள் அதிகளவில் நடத்தப்படும். குறிப்பாக, மாணவிகளுக்கு எடுத்துக் கூறும் வகையில் ஆசிரியர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படும்.
 பெண் குழந்தைகள், மாணவிகளுக்கு தெரிந்த நபர்கள் மூலம்தான் அதிகளவு பாலியல் வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. பெண் குழந்தைகள் அறிமுகம் இல்லாதவர்களுடன் பேசுவதையோ, பழகுவதையோ தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
 அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ் மற்றும் உள்கோட்ட காவல் நிலையத்துக்கு உள்பட்ட  ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவல் துறை வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜ் மரக்கன்றுகள் நட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments