சங்கராபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட வங்கிக் கிளை திறப்பு
சங்கராபுரத்தில் குளிர்சாதன வசதியுடன் புதுப்பிக்கப்பட்ட இந்தியன் வங்கிக் கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கராபுரத்தில் குளிர்சாதன வசதியுடன் புதுப்பிக்கப்பட்ட இந்தியன் வங்கிக் கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கடலூர் மண்டல துணை மேலாளர் சேகர் தலைமை வகித்தார். ஓய்வூதியர் சங்கத் தலைவர் கலியமுர்த்தி, அரிமா மாவட்டத் தலைவர் ஜனனி மகாலிங்கம், ஆசிரியர்கள் ராமகிருஷ்ணன், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் குமார் அனுகுல் வரவேற்றார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கிவைத்தார். குளிர்சாதன வசதியுடன் புதுப்பிக்கப்பட்ட வங்கிக் கிளையை சார்நிலை கருவூலக அலுவலர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார். ஏடிஎம் நிலையத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமால் திறந்து வைத்தார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வங்கியின் கடலுôர் மண்டல மேலாளர் சுப்பிரமணியன் பேசியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் முன்னோடி வங்கியாக சங்கராபுரம் இந்தியன் வங்கி உள்ளது. கடந்த ஆண்டு ரூ.6,600 கோடி இருந்த வர்த்தகம், நிகழாண்டு ரூ.8,400 கோடியாக உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்கள், ஓய்வூதியர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, சங்கராபுரம் இந்தியன் வங்கிக்கு 5 பேர் வங்கித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கிராமங்களில் வீடுகள் தேடி வரும் இவர்கள் முலம் ரூ.10 ஆயிரம் வரை பணம் பெற்றுக் கொள்ளலாம். வயதானவர்கள் வங்கிக்கு வர வேண்டிய அவசியம் கிடையாது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.