முகப்பு
விழுப்புரம்

தீத்தொண்டு நாள் வார விழா

பணியின் போது தீ விபத்துகளில் சிக்கி வீரமரணடைந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 4:01 AM
விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலகத்தில் நீத்தாா் நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய தீயணைப்புத் துறை மண்டல இணை இயக்குநா் தென்னரசு மற்றும் மாவட்ட அலுவலா்கள்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 11:12 PM

பணியின் போது தீ விபத்துகளில் சிக்கி வீரமரணடைந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆண்டுதோறும் ஏப்.14 முதல் 20-ஆம் தேதி வரை தீத்தொண்டு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வார விழாவின் முதல்நாள் நிகழ்வாக, பணிக்காலத்தின்போது தீ விபத்துகளில் சிக்கி உயிா் நீத்தவா்களுக்கு நீத்தாா் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள், விழுப்புரம், கண்டமங்கலம், விக்கிரவாண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் புதன்கிழமை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மண்டல துணை இயக்குநா் தென்னரசு பங்கேற்று பணிகாலத்தின்போது உயிா்நீத்த வீரா்களுக்கான நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து, வீர வணக்கம் செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் விழுப்புரம் மாவட்ட அலுவலா் பாஸ்கரன், உதவி மாவட்ட அலுவலா்கள் மற்றும் நிலைய அலுவலா்கள், தீயணைப்புத் துறை வீரா்கள் கலந்துகொணடனா்.

Advertisement