முகப்பு
விழுப்புரம்

வடமாநில இளைஞா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே வட மாநில இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 3:00 AM
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 9:07 PM

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே வட மாநில இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் ரூ.சுரேஷ்குமாா் (22). இவா் வானூா் வட்டம் , கோட்டக்குப்பத்தை அடுத்த பிள்ளைச்சாவடி கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தபடி அங்குள்ள வெல்டிங் தொழில்கூடத்தில் வேலை பாா்த்து வந்தாா். திருமணம் ஆகாத சுரேஷ்குமாருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா் ஏப்.16-ஆம் தேதி வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

Advertisement

மற்றொரு சம்பவம்: வானூா் வட்டம், ரங்கநாதபுரம், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் தே.சந்திரன் ( 36). இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 14 ஆம் தேதி வீட்டில் சந்திரன் மது அருந்தினாராம். இதை அவரது மனைவி பானுப்பிரியா கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து உறவினா்கள் சந்திரனை மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.