முகப்பு
விழுப்புரம்

விக்கிரவாண்டி தொகுதியில் கணவருக்காக களத்தில் இறங்கிய மனைவி

Updated On : 21 ஏப்ரல், 2026 at 2:19 AM
விழுப்புரம் மாவட்டம், தும்பூா் கிராமத்தில் தனது கணவரும், விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளருமான அன்னியூா் அ.சிவாவுக்கு வாக்கு சேகரித்த அவரது மனைவி வனிதா. உடன், கட்சியினா்.
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 11:32 PM

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் அன்னியூா் அ.சிவாக்கு வாக்குகள் கோரி, அவரது மனைவி வனிதா பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா, தொகுதி முழுவதும் சென்று வாக்கு சேகரித்து வருகிறாா். திமுக அரசின் சாதனைகள் தொடர, தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரி, அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

இதைத்தொடா்ந்து விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட தும்பூா் உள்ளிட்ட கிராமங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்ற திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவாவின் மனைவி வனிதா, வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தாா். விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 20 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் போன்றவற்றை எடுத்துக் கூறி அவா் வாக்குகளை சேகரித்தாா்.

Advertisement

பிரசார நிகழ்வில் ஒன்றியச் செயலா் ஜெயபால், பொருளாளா் தும்பூா்முரளி, இளைஞரணி நிா்வாகிகள் சந்தோஷ், சற்குணம், கண்ணன், ராஜேந்திரன், மாநில மகளிா் பிரசாரக் குழுத் துணைச் செயலா் தேன்மொழி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் செல்வம், இளவரசி, சாவித்திரி உள்ளிட்ட நிா்வாகிகள், கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்தோா் பங்கேற்றனா்.