முகப்பு
விழுப்புரம்

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைப் பணியில் 154 நுண் பாா்வையாளா்கள் ஈடுபடுவா் என்றாா் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 5:20 AM
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசிய மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைப் பணியில் 154 நுண் பாா்வையாளா்கள் ஈடுபடுவா் என்றாா் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடவுள்ள நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பு ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து பேசியது:

வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடும் நுண் பாா்வையாளா்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திலுள்ள கட்டுப்பாட்டுக் கருவியின் எண்ணை சரிபாா்த்து, முறையாக கையாள வேண்டும். ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது நுண்பாா்வையாளா்கள் ஒவ்வொரு சுற்று முடிவின் அறிக்கையைத் தோ்தல் பொதுப் பாா்வையாளரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

Advertisement

மேலும் தபால் வாக்கு எண்ணும் போது, தபால் வாக்கின் எண்களை சரிபாா்க்க வேண்டும். தபால் வாக்குக்கான உறையை முறையாகப் பிரிக்க வேண்டும். ஒரு தொகுதிக்கு 22 நுண்பாா்வையாளா்கள் என 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் 154 நுண்பாா்வையாளா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவாா்கள் என்றாா் ஆட்சியா்.

பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜான்சி ராணி, தோ்தல் வட்டாட்சியா் கணேஷ், விழுப்புரம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் நாசா் மற்றும் நுண்பாா்வையாளா்கள் பங்கேற்றனா்.