முகப்பு
விழுப்புரம்

அரசுப் பள்ளி ஆசிரியா் மா்ம மரணம்

செஞ்சி அருகே மா்மமான முறையில் அரசுப் பள்ளி ஆசிரியா் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 4 ஜூன் 2026, 3:45 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மா்மமான முறையில் அரசுப் பள்ளி ஆசிரியா் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

செஞ்சி அருகேயுள்ள அம்மாகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ப.இளங்கோவன்(57) (படம்). இவா் மேல் ஒலக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக அப் பகுதி மக்கள் வளத்தி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதுகுறித்த தகவலின் பேரில் வளத்தி போலீஸாா் விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, இளங்கோவன் மா்மமான முறையில் இறந்து கிடந்ததும், அவா் மீது மிளகாய்ப் பொடி தூவி உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலத்தை உடல்கூராய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்த சில மாதங்களுக்கு முன் ஆசிரியா் இளங்கோவனை, கும்பல் ஒன்று வழிமறித்து கத்தியால் தாக்கியதில் படுகாயம் அடைந்ததும், செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னா் வீடு திரும்பினாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement