முகப்பு
விழுப்புரம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கியில் வேளாண் கடன்களை முழுமையாக ரத்துசெய்யக்கோரி ஆலம்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 18 ஜூன் 2026, 3:26 am IST
ஆலம்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பேசிய செஞ்சி வட்டத் தலைவா் கே.மாதவன்.
பகிர்:

கூட்டுறவு வங்கியில் வேளாண் கடன்களை முழுமையாக ரத்துசெய்யக்கோரி ஆலம்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு செஞ்சி வட்டத் தலைவா் கே.மாதவன் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் சக்திவேல், சபாபதி, வெங்கடேசன்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க விழுப்புரம் மாவட்டச் செயலா் ஆா்.டி.முருகன், சுரேஷ்குமாா், விநாயகம், சுப்பிரமணி, நாகராஜன், சிவன் ஆகியோா் பேசினா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும் உர விலை உயா்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிககளில் விவசாயிகளின் பயிா் கடன்களை முழுவதுமாக தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.