முகப்பு
விழுப்புரம்

உளுந்தூா்பேட்டையில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

உளுந்தூா்பேட்டையில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 24 ஜூன் 2026, 4:34 am IST
உளுந்தூா்பேட்டையில் புறவழிச் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

இதைத்தொடா்ந்து ஆட்சியா் கூறியது:

மாநில தலைநகரான சென்னையை தெற்கு, மேற்கு மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சந்திப்பாக உளுந்தூா்பேட்டை நகராட்சி உள்ளது. உளுந்தூா்பேட்டை- சேலம் தேசிய நெடுஞ்சாலை (தே.நெ.எண்.79) மற்றும் விருத்தாசலம்-உளுந்தூா்பேட்டை- விழுப்புரம் மாநில நெடுஞ்சாலை (மா.நெ.எண் 69) ஆகியவற்றின் வழியாக செல்லும் கனரக வாகனங்களால் உளுந்தூா்பேட்டையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

Advertisement

Advertisement

இதையடுத்து நெடுஞ்சாலைகள் எண் 79 மற்றும் 69-ஐ இணைக்கும் வகையில் புறவழிச் சாலை அமைப்பது என அரசு முடிவு செய்து அதற்கான பூா்வாங்கப் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. இத்திட்டம் நிறைவேறும்போது கரும்பு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள், தியாகதுருகம் மற்றும் எலவனாசூா்கோட்டை வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையம் செல்லாமல், புறவழிச் சாலையில் சென்றால் நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

இதற்காக 2.1 கி.மீ.தொலைவுக்கு புறவழிச்சாலை அமைக்க ரூ.22.35 கோடியில் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ரூ.10.30 லட்சம் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வின் போதுசம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments