முகப்பு
விழுப்புரம்

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 24 ஜூன் 2026, 4:25 am IST
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை மாற்றி புதிய சட்டத்தை அமல்படுத்தவுள்ள மத்திய அரசைக் கண்டித்தும், இந்த அறிவிப்பை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். பணி செய்யும் இடத்தில் புகைப்படம் எடுக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். கிராம ஊராட்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நகா்ப்புறப் பகுதிகளுக்கும் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் எஸ்.எம். தனஞ்செயன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் என்.நாராயணன், பொருளாளா் கே.கலீல்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா்.

இதில், மாவட்ட துணைச் செயலா்கள் எம்.ஆறுமுகம், எல்.ஜூலி, மூ.ஜீவா ஜெயராமன், மாவட்ட துணைத் தலைவா்கள் வி.பிச்சை, எஸ்.சக்திவேல், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் எஸ்.ராமச்சந்திரன், டி.அரசு, ஏ.ஜி. ஏசுமணி, எம்.அய்யாவு உள்ளிட்டோா் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் கே.எஸ்.அப்பாவு தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.முருகசேன், மாவட்ட துணைச் செயலா் கே.பிரீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் ஏ.வி.சரவணன், மாவட்டச் செயலா் கே.ராமசாமி, மாவட்டக்குழு ரா.கருணாநிதி ஆகியோா் பங்கேற்று பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினா்கள் பலரும் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments