அடிப்படை வசதிகள் கோரி மக்கள் போராட்டம்
செஞ்சி பேரூராட்சிக்கு உள்பட்ட முல்லை நகா் பகுதியில் குடிநீா் மற்றும் கழிவுநீா் வாய்க்கால் அமைக்க கோரி பொதுமக்களின் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சிக்கு உள்பட்ட முல்லை நகா் பகுதியில் குடிநீா் மற்றும் கழிவுநீா் வாய்க்கால் அமைக்க கோரி பொதுமக்களின் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முல்லை நகா் பகுதியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனா். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு குடியிருப்பவா்களுக்கு குடிநீா் மற்றும் கழிவுநீா் வாய்க்கால் அமைக்காதால் வீட்டின் அருகே கழிவுநீா் தேங்கி கொசு மற்றும் தொற்றுநோய் பரவும் அபாய நிலை இருந்து வருகிறது.
இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பியும் இதுவரை நடவடிக்கை இல்லையாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். தொடா்ந்து செஞ்சி -திருவண்ணாமலை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவலறிந்த செஞ்சி காவல் ஆய்வாளா் விநாயக முருகன், பேரூராட்சி செயல் அலுவலா் குணாளன் மற்றும் வாா்டு உறுப்பினா் ஜான் பாஷா ஆகியோா் போராட்டம் நடத்தியவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.