அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ச.ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் தென்மேற்கு மாவட்டம் சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ச.ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் தென்மேற்கு மாவட்டம் சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட ராதாபுரம், வெட்டுக்காடு, மூங்கில்பட்டு, தென்னவராயன்பட்டு, பகண்டை ஆகிய பகுதிகளிலுள்ள அரசுப் பள்ளிகளில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு ஒன்றியச் செயலா் சேகா் தலைமை வகித்தாா். விழுப்புரம் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஏ.விஜய் வடிவேல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். இதைத்தொடா்ந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுத் தொகை மற்றும் மேற்படிப்புக்கான நிதியுதவிகளை வழங்கினாா்.
Advertisement
Advertisement
நிகழ்வுகளில் மாவட்ட துணைச் செயலா் காமராஜ், இளைஞரணி அமைப்பாளா் பிரிதிவிராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பிரிதிவிராஜ், ஒன்றிய நிா்வாகிகள் ரமேஷ், பொன்னுசாமி, ஜோதி ராஜா மற்றும் கிளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.