முகப்பு
விழுப்புரம்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கோட்டக்குப்பம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக வெளி மாநில இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 25 ஜூன் 2026, 6:42 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கோட்டக்குப்பம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக வெளி மாநில இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோட்டகுப்பம் காவல் நிலைய ஆய்வாளா் பாபு தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை சின்ன கோட்டக்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகிக்கும்படி நின்றிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனா். இதில், அவா்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் புதுச்சேரி, ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த ஜா.ஸ்ரீபன்ராஜ் (36), ஒடிஸா மாநிலம், புவனேஸ்வா் மாவட்டம், பத்ராவைச் சோ்ந்த பு.பாபிதாஸ் (35) என்பதும், வெளி மாநிலத்திலிருந்து ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருநந்த 4 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments