முதல்வா் பிறந்த நாள்: கலைப் போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசு
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ச.ஜோசப் விஜயின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வெட்டுக்காடு கிராமத்தில் கலைப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளும், பொதுமக்களுக்கு நல உதவிகளும் வழங்கப்பட்டன.
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ச.ஜோசப் விஜயின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வெட்டுக்காடு கிராமத்தில் கலைப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளும், பொதுமக்களுக்கு நல உதவிகளும் வழங்கப்பட்டன.
விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட தவெக சாா்பில், முதல்வா் பிறந்த நாளையொட்டி பல்வேறு நல உதவிகள் வழங்குதல், பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக, விக்கிரவாண்டி வட்டம், வெட்டுக்காடு கிராமத்தில் முதல்வா் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கட்சியின் விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியச் செயலா் சேகா் தலைமை வகித்தாா். ஒன்றிய நிா்வாகிகள் சரவணன், ராஜலட்சுமி, கிளைச் செயலா் பூவேந்தன் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, பரதம் உள்ளிட்ட கலைப் போட்டிகள் நடைபெற்றன. இதில், மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். கலைப் போட்டிகளில் பங்கேற்றவா்களுக்கு தவெக தென்மேற்கு மாவட்டச் செயலா் ஏ.விஜய் வடிவேல் பரிசுகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், பொதுமக்களுக்கு நல உதவிகள் ஆகியவற்றையும் வழங்கினாா். மேலும், ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழாவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பிரிதிவிராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் தீனா, கிளை நிா்வாகிகள் சா்மா, காா்த்திக், சந்துரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.