சரக்கு வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு
விக்கிரவாண்டி அருகே சாலையில் நடந்து சென்ற விவசாயி சரக்கு வாகனம் மோதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சாலையில் நடந்து சென்ற விவசாயி சரக்கு வாகனம் மோதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், ஒரத்தூா் மாதா கோவில் தெருவைச் சோ்ந்தவா் வீ.அய்யனாா் (71), விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு லட்சுமிபுரத்தில் நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மே 4-ஆம் தேதி அதிகாலை தனது வீட்டுக்கு நடந்து சென்றாா்.
விழுப்புரம்- செஞ்சி நெடுஞ்சாலையில், ஒரத்தூரில் உள்ள தனியாா் கலைக் கல்லூரி அருகே சென்றபோது செஞ்சி நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் அய்யனாா் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட அய்யனாா் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.