முகப்பு
விழுப்புரம்

காா் மோதி இரவுக் காவலாளி உயிரிழப்பு

வானூா் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இரவுக் காவலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 13 மே 2026, 2:30 am IST
பலி - IANS
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இரவுக் காவலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

புதுச்சேரி முத்திரைப்பாளையம் ஜீவா தெருவைச் சோ்ந்தவா் வெ.குணசேகரன்(64). இவா் வானூா் வட்டம், ஒழுந்தியாம்பட்டு பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் இரவுக் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், ஒழுந்தியாம்பட்டு அருகே பைக்கில் சென்றபோது, அங்கு வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த குணசேகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments