வார பலன்கள் (ஏப். 24 - 30) மேஷம் - மீனம்! பதவி உயர்வு யாருக்கு?
இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஏப்ரல் 24 - 30) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
தொழிலில் வளர்ச்சி உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் மாற்றங்களைக் காண்பீர்கள். வியாபாரிகள் புதிய யுத்தி
களைப் புகுத்தி வருமானத்தைப் பெருக்க முயல்வீர்கள். விவசாயிகள் அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கியஸ்தர்
Advertisement
களின் நட்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு
திறமைகளை வெளிப்படுத்த புதிய சந்தர்ப்பங்கள் உருவாகும். பெண்களுக்கு கணவரிடம் அன்பு, பாசம்
அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
உங்களுக்குக் கீழ் பணிபுரிந்தோருக்கு உதவிகளைச் செய்வீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் வேலைகளை கவனத்துடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு போட்டி பொறாமைகள் சற்று தலை தூக்கும். விவசாயிகளுக்கு மானியத்துடன் வங்கிக் கடன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கலைத்துறை
யினரின் உயர்வுக்கு சக கலைஞர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பெண்கள் உற்றார் உறவினர்களிடம்
அன்புடன் பழகுவீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
வருமானம் சிறப்பாக இருக்கும். சிலர் புதிய வீடுகளுக்கு மாறுவீர்கள். பெற்றோரிடமிருந்து நன்மைகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் மனமறிந்து செயல்படுவீர்கள். வியாபாரிகளுக்கு பொருள்களின் விற்பனை நல்ல முறையில் நடக்கும். விவசாயிகள் கழனிகளைச்
சீரமைப்பீர்கள். அரசியல்வாதிகள் கட்சியில் நல்ல பெயரெடுப்பீர்கள். கலைத்துறையினருக்குப் பொருளாதாரம் சீராக இருக்கும்.
பெண்களுக்குக் குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். மாணவர்கள் பெற்றோருடன் விட்டுக்கொடுத்துப் பழகுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
உற்றார் உறவினர் நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். உழைப்புக்கேற்ற வருமானம் உடனுக்குடன் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வருமானத்தில் எந்தக் குறையும் வராது. வியாபாரிகள் புதிய முதலீடுகளை கவனமாகச் செய்வீர்கள். விவசாயிகள் புதிய விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி பிரசாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்வீர்கள். பெண்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் தினமும் பாடங்களைப் படித்து முன்னேறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
வங்கிக் கடன் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகள் விவசாய இடுபொருள்களுக்கும் சிறிது செலவு செய்ய நேரிடும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையினர் சக கலைஞர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்.
பெண்கள் குழந்தைகளால் சந்தோஷத்தைக் காண்பீர்கள். மாணவர்கள் தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
தொழிலில் உங்கள் அனுபவ அறிவு பயன்படும். கொடுத்த வாக்கைக்காப்பாற்றிவிடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இட மாற்றத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் மேன்மை உண்டாகும். விவசாயிகளுக்கு மானியங்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் நண்பர்களாலும் தொண்டர்களாலும் ஏற்றம் பெறுவீர்கள். கலைத்துறையினருக்குப் பயணங்களால் நன்மை உண்டாகும்.
பெண்கள், குடும்பத்தில் மருத்துவச் செலவு குறையக் காண்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
உடன்பிறந்தோருக்கு உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். பொருளாதாரம் சீராக இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் போனஸ் பெறுவீர்கள். வியாபாரிகள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள்.
விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு லாபம் அடைவீர்கள். அரசியல்வாதிகள் சுறுசுறுப்பாகக் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினர்
சக கலைஞர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். பெண்களின் கருத்துகளை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். மாணவர்கள் சக மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
மனதில் தெளிவு பிறக்கும். போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்
படும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்குக் கூட்டாளிகள் உறுதுணையாக இருப்பார்கள். விவசாயிகள், நீர்வரத்து அதிகரிப்பதால் புதிய பயிர்களைப் பயிரிடுவீர்கள்.
அரசியல்வாதிகள் வெளியூர்களுக்குச் சென்று கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினரின் மறைமுகத் திறமைகள் வெளிப்படும்.
பெண்களுக்குக் கணவருடன் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வி சம்பந்தமான பயணங்களைச் செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
பொருளாதார மேன்மை தொடரும். பயணங்களில் புதிய அறிமுகங்கள் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் கூடுதல் சுமைகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். வியாபாரிகள் புதிய யுத்திகளைச் செயல்படுத்துவீர்கள். விவசாயிகள் குத்தகைப் பாக்கிகளை வசூலிப்பீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். கலைத்துறையினர் துறையில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். மாணவர்கள் புதிய முயற்சிகளில் பொறுமையாகச் செயல்பட வேண்டும்.
சந்திராஷ்டமம் - ஏப்ரல் 24, 25.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
தைரியத்துடன் புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். தொழிலில் புதிய இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு உழைப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் சிறப்புகளைக் காண்பீர்கள். விவசாயிகள் மானிய விலையில் ரசாயன உரங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் சுமுகமாக நடந்துகொள்ளும். கலைத்துறையினருக்கு துறையில் இருந்த கட்டுப்பாடுகள் விலகும்.
பெண்கள் ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டமம் - ஏப்ரல் 26, 27.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
உடன் பிறந்தோர் உறுதுணையாக இருப்பார்கள். சமுதாயத்தில் உங்கள் பெயர், புகழ் கூடும்.
உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் குறைவான முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கு அரசு அதிகாரிகளிடம் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினர் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.
பெண்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஏப்ரல் 28, 29, 30.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
எதிரிகள் தானாகவே விலகிவிடுவார்கள். உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும்.
உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வுடன் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் சிறிது செலவு செய்து, கடையைச் சீரமைப்பீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தை மதித்து நடப்பீர்கள். கலைத்துறையினர் புதிய கலைநுட்பங்களைக் கற்பீர்கள்.
பெண்கள் கணவர் குடும்பத்தாருடன் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.