FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வெள்ளிமணி

வார பலன்கள் (ஜூன் 12 - 18) 12 ராசிகளுக்கும்! எதிர்பாராத அதிர்ஷ்டம் யாருக்கு?

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 12 ஜூன் 2026, 11:58 am IST
ஜோதிடம் - DPS
பகிர்:

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (ஜூன் 12 - 18) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பணப்பழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கடையை சிறிய அளவுக்கு விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட விவசாயப் பணிகள் சுமுகமாக முடிவடையும்.

Advertisement

Advertisement

அரசியல்வாதிகள் தொண்டர்களின் குறைகளைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் மேற்படிப்பு முயற்சிகளில் வெற்றிபெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

வெளியூர் பயணங்களில் நன்மை உண்டாகும். தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகக் கடன்களை விரைவில் அடைக்க முயற்சி எடுப்பீர்கள். வியாபாரிகளுக்குக் கொடுக்கல் - வாங்கலில் சிரமங்கள் குறையும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் பழைய பதவிகள் தேடி வரும். கலைத்துறையினரின் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.

பெண்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

வீட்டில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி, நட்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் நன்மை அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு சற்று குறைந்தே காணப்படும். கலைத்துறையினருக்கு பண வரவு சாதகமாக இருக்கும்.

பெண்கள் பேச்சில் கவனமாக இருக்கவும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறையுடன் செயல்படுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

வருமானம் எதிர்பார்த்தபடியே இருக்கும். சேமிப்புகளைப் பெருக்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக பிரச்னைகள் குறையும். வியாபாரிகள் புதிய நண்பர்களை வியாபாரத்தில் சேர்த்துக் கொள்வீர்கள். விவசாயிகள் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களில் சற்று தோல்வி நிலையையே சந்திப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதுப்புது ஒப்பந்தங்கள் கைகூடி வரும்.

பெண்கள் குடும்ப ரகசியங்களை வெளியில் பேச வேண்டாம். மாணவர்கள் நண்பர்களுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

மனதில் இருந்த குழப்பங்களும் சஞ்சலங்களும் விலகும். பொருளாதார நிலைமை சீரடையும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகச் சூழலுக்கேற்ப செயல்முறைகளை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரிகள் நேரடியாகவே வியாபாரத்தில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். விவசாயிகளுக்கு உற்பத்தி நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் மிகவும் நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்வீர்கள்.

பெண்கள் குழப்பங்களை சாதுரியமாகச் சமாளிப்பீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளில் தவறாமல் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உங்கள் செயல்களைத் திட்டமிட்டு சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். பயணங்களால் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு தடைகள் அனைத்தும் விலகும். விவசாயிகள் வயல் வரப்பு பிரச்னைகளை பொறுமையாகக் கையாளுவீர்கள்.

அரசியல்வாதிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.

பெண்கள் கணவர் வழி உறவினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் பெற்றோரின் அறிவுரைப்படி நடந்து கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 12.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

சமுதாயத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் பழைய கடன்களை வசூலிப்பீர்கள். விவசாயிகள் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்துக்கு தகவல் அனுப்பும் பொழுது எச்சரிக்கையாக இருப்பீர்கள். கலைத்துறையினர் துறையில் எதிர்பார்த்த வளர்ச்சி அடைவீர்கள்.

பெண்கள் உற்றார் உறவினர்களிடமிருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். மாணவர்கள் எதிர்கால சிந்தனையுடன் செயல்படுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 12, 13, 14.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தோற்றத்தில் பொலிவும், நடையில் மிடுக்கும் உண்டாகும். புதியவர்களை நம்பி செயல்படுவதைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும். வியாபாரிகள் வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள்.

விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் துறையில் அனுகூலமான சூழல்களை உருவாக்கிக் கொள்வீர்கள்.

பெண்கள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தேவையான உதவிகளைச் செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 15, 16.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

வருமானத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் அதிக கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் ஈடுபட்டு நலிந்தவர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினருக்கு ரசிகரின் அன்பும் ஆதரவும் பெருகும்.

பெண்கள் தெய்வ வழிபாடுகளில் மனதைச் செலுத்துவீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 17, 18.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சொத்து பிரச்னைகள் சுமுகமாக முடியும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் லாபகரமாக இருக்கும். விவசாயிகளுக்கு சந்தையில் கொள்முதல் லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் கெüரவத்தை உயர்த்திக் கொள்வீர்கள். கலைத்துறையினர் பண வரவு அதிகரிப்பதால் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள்.

பெண்கள் ஆன்மிகத்திலும் தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பூர்விகச் சொத்துகளில் சுமுகமான பாகப்பிரிவு உண்டாகும். சமூகத்தில் உயர்ந்தவர்கள் தக்க சமயத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவு தந்து உதவுவார்கள். வியாபாரிகள் பொருள்களை நல்ல விலைக்கு விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் சிறப்பான மகசூலைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் ஆதரவு பெற முயற்சி செய்வீர்கள். கலைத்துறையினர் புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

பெண்களுக்கு மழலை வரவால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் படிப்பில் ஆர்வத்தை அதிகரித்துக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைப் பதற்றப்படாமல் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் திறமையாக வியாபாரத்தைச் செய்வீர்கள். விவசாயிகள் கடின உழைப்பால் விளைச்சலை அதிகரித்துக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரிடம் கவனமாக இருப்பீர்கள். கலைத்துறையினர் மனதுக்கு இனிய கலைப் பயணங்களைச் செய்வீர்கள்.

பெண்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்படி இல்லத்தைத் தேடி உறவினர்கள் வருவார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

summary

Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week ( June 12 - 18). Read and benefit.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments