FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வாரப் பலன்கள்

வார ராசி பலன்கள் (ஆக. 28 - செப். 3) 12 ராசிகளுக்கும்! பதவி உயர்வு நிச்சயம் இந்த ராசிக்கு!

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. வார ராசி பலன்கள்

28 ஆகஸ்ட் 2026, 12:26 pm IST
astro - file photo
பகிர்:

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 3) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

1

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தொழிலில் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் தென்படும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள்

நல்லபடியாக முடியும். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் மகிழ்ச்சியடைவீர்கள். விவசாயிகள் மகசூலில் மேன்மையைக் காண்பீர்கள்.

Advertisement

Advertisement

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் கவனமாக நடந்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

பெண்களுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

2

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பால் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருப்பீர்கள்.

விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். அரசியல்வாதிகள் கட்சிமேலிடத்தில் நற்பெயரெடுப்பீர்கள். கலைத்துறையினர் புகழ் பெறுவீர்கள்.

பெண்கள் ஆன்மிகப் பெரியோரின் ஆசிகளைப் பெற்று ஆன்மிகப் பலத்தைக் கூட்டிக் கொள்வீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

3

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பழைய பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். இதனால் திட்டமிட்டபடி செயல்படமுடியும். உடல் உபாதைகள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை சாதுர்யத்துடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் அதிக போட்டிகளைச் சந்திப்பீர்கள். விவசாயிகளுக்குக் கொள்முதலில் லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்குக் கட்சிப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்குச் சில சில்லறைச் செலவுகள் ஏற்படும். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்களின் தேவைகளை பெற்றோர்கள் நிறைவேற்றுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

4

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். பெற்றோருடன் இணக்கமாக இருப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் தக்க நேரத்தில் உதவி செய்வார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

விவசாயிகளுக்கு நிலத்தகராறுகள், வரப்புச்சண்டைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

அரசியல்வாதிகளுக்குத் தொண்டர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கு உதவி செய்வார்கள்.

பெண்கள் குடும்பத்தாருடன் அன்பு, பாசத்துடன் பழகுவீர்கள். மாணவர்கள் நற்பெயரெடுப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 28, 29.

5

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

எந்தக் காரியத்தையும் ஆழ்ந்து சிந்தித்து நடைமுறைப்படுத்துவீர்கள். வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடிவடையும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனமாகவும், சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் சிறப்பைக் காண்பீர்கள். விவசாயிகள் கூடுதல் விளைச்சலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு, மரியாதை கூடும். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை சிறப்பாகச் செய்து முடித்துவிடுவீர்கள். பெண்கள் மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள். மாணவர்களுக்கு யாவும் வெற்றிகரமாக அமையும்.

சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 30, 31.

6

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணங்கள் மூலம் மாற்றங்களைக் காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் காலநேரத்தை வீணாக்காமல் உழைத்துப் பெருமையடைவீர்கள். வியாபாரிகள் புதியவர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகள் கால்நடைகளால் நன்மையடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு வருமானம் பல வழிகளில் தேடிவரும். கலைத்துறையினர் ரசிகர்களை அரவணைத்துச் செல்வீர்கள். பெண்கள் குடும்பப் பொறுப்புகளைச் சரியாக நடத்துவீர்கள். மாணவர்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப்பொழுதைக் கழிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - செப்டம்பர் 1, 2.

7

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

மன உறுதியுடனும் திட சிந்தனையுடனும் காரியங்களை ஆற்றுவீர்கள். குடும்பத்தினரிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் ஆதரவான சூழ்நிலை உண்டாகும். வியாபாரிகள் வியாபாரத்தில் சிலமாற்றங்களைச் செய்து முன்னேறுவீர்கள். விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் சிறப்பாக அமையும்.

அரசியல்வாதிகளுக்கு சமுதாயத்தில் செல்வாக்கு உயரும். கலைத்துறையினருக்கு ஆற்றல் அதிகரிக்கும். பெண்கள் இல்லத்தில் நிகழும் சந்தோஷத்தால் உற்சாகமடைவீர்கள். மாணவர்கள் விளையாட்டில் கவனமாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - செப்டம்பர் 3.

8

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வருமானம் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தோரின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பீர்கள். பூர்விக வீட்டை சீரமைப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும்.

விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவை முழுமையாகப் பெறுவீர்கள். கலைத்துறையினர் எடுத்த காரியங்கள் அனைத்தையும் சரியான நேரத்தில் செய்துமுடித்துவிடுவீர்கள்.

பெண்கள் குழந்தைகளின் நலனில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் புதிய நண்பர்களிடம் கவனமாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

9

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய இடங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் சக விவசாயிகளுக்கு தக்க நேரத்தில் உதவிகரமாக இருப்பீர்கள்.

அரசியல்வாதிகள் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளை இனம்கண்டு கொள்வீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். பெண்கள் குடும்பத்துடன் திருத்தலங்களுக்குச் சென்றுவருவார்கள். மாணவர்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

10

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

மனதில் புத்துணர்ச்சியும் தெளிவும் பிறக்கும். தொழிலில் புதிய அனுபவம் கிடைக்கும். பெற்றோர் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும்.

உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு வங்கிக்கடன் கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் எதிர்பார்த்ததற்கு அதிகமாகக் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் உள்கட்சி விவகாரங்களில் இருந்து ஒதுங்கி இருப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் விலையுயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

11

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

எதிர்வரும் இடையூறுகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். பூர்விக சொத்துகளில் இருந்த வில்லங்கம் தீரும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச்செல்வீர்கள். விவசாயிகள் அந்தஸ்து உயரக்காண்பீர்கள். அரசியல்வாதிகள் போராட்டங்களில் புதிய உத்வேகத்துடன் ஈடுபடுவீர்கள்.

கலைத்துறையினர் புதிய முயற்சிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவீர்கள். பெண்கள் கணவரிடம் எதிர்பார்த்த அன்பையும் பாசத்தையும் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

12

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதாரம் சீராகும். உடல் ஆரோக்கியம், மனநலம் இரண்டும் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

வியாபாரிகள் கூட்டாளிகளுடன் அனுசரித்து நடந்துகொள்வீர்கள். விவசாயிகள் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து லாபமடைவீர்கள்.

அரசியல்வாதிகள் மக்களுக்கான உண்மையான போராட்டங்களில் மட்டுமே கலந்துகொள்வீர்கள். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்களில் பணவரவு நன்றாக இருக்கும். பெண்களை உறவினர்கள் பாராட்டுவார்கள். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்ந்து மகிழ்ச்சியடைவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

summary

Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week (August 28 - September 3). Read and benefit.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments