லாபமடையும் ராசிகள் எவை? வார ராசி பலன்கள் (அக். 9 - 15)
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. வார ராசி பலன்கள்
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (அக். 9 - 15) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். விரும்பிய பொருள்களை வாங்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் இடையூறுகளைத் தவிர்த்து அலுவலக வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளை அரவணைத்துச் செல்வீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் தொடரும்.
Advertisement
Advertisement
அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை நினைத்தபடி முடித்து விடுவீர்கள். கலைத்துறையினர் நல்ல வருமானம் தரும் ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.
பெண்கள் குடும்பத்தின் ஒற்றுமையைப் பேணிக்காப்பீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - அக்டோபர் 14, 15.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
தன்னம்பிக்கையும் தனித் திறமையும் கூடும். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் வழக்கமாகச் செய்யும் வேலைகளில் எச்சரிக்கையாகச் செயல்படுவீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த பணவரவைக் காண்பீர்கள். விவசாயிகள் புதிய ஊடுபயிர்களைப் பயிரிட்டு நல்ல மகசூலைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்துச் சென்று, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களைப் பாராட்டுவார்கள்.
பெண்கள் கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
தொழிலில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். அரசுப் பணிகள் சாதகமாக முடிவடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
உத்தியோகஸ்தர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலைகளை முடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் வருமானம் அதிகரிக்கக் காண்பீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் ஈடுபாட்டை அதிகரிப்பீர்கள். கலைத்துறையினர் சிறிது தாமதத்துக்குப் பிறகு புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.
பெண்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். மாணவர்கள் கடின உழைப்பைக் கூட்டிக் கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
பழைய கடன்கள் வசூலாகும். புதியவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிறு தூரப் பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் கடையை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் நிறைய கிடைக்கும்.
அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினர் அரசு கெüரவம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்கள் உடன் பிறந்தோருக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள்.
மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
தொழிலில் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள் உரிய ஆலோசனைகளை உயரதிகாரிகளிடம் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு விற்பனையில் எதிர்பாராத பணவரவு உண்டாகும். விவசாயிகள் சக விவசாயிகளுக்கு உதவிகரமாக இருப்பீர்கள்.
அரசியல்வாதிகளின் மேல் கட்சி மேலிடம் கருணையுடன் நடந்து கொள்ளும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
பெண்கள் கணவரின் அன்பும், பாசமும் பெறுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
சகஜமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வசிக்கும் வீட்டைப் புதுப்பிப்பீர்கள். உழைப்புக்குத் தகுந்த பலன் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் லாபத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தைத் திருப்திப்படுத்துவீர்கள். கலைத்துறையினர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெண்கள் குடும்பத்தினரிடம் அன்புடன் பழகுவீர்கள். மாணவர்கள் பெற்றோரின் சொல் கேட்டு நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
தொழிலை விரிவுபடுத்துவீர்கள். புதிய நிலம் வாங்க முன்பணம் கொடுப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை உண்டாக்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை பொறுமையாகச் செய்து முடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் போட்டிகளை சாதுரியமாகச் சமாளிப்பீர்கள்.
விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும். அரசியல்வாதிகளின் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.
கலைத்துறையினர் முயற்சிகளைத் தீவிரமாக்கி வெற்றி பெறுவீர்கள். பெண்கள் ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
பணவரவு திருப்தியாக இருக்கும். உடன்பிறந்தோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் விவாதங்களில் ஈடுபட மாட்டீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் கவனமாக இருப்பீர்கள். விவசாயிகள் கால்நடைகளை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினரிடம் எச்சரிக்கையாகப் பழகுவீர்கள். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு உந்து சக்தியாக இருக்கும்.
பெண்கள் குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுத்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.
பெண்கள் பெற்றோரை அனுசரித்துச் செல்வீர்கள். மாணவர்கள் புதிய பாடப் பிரிவுகளில் சேர்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
நெடுநாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பூர்விக சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் மறையும். அதே நேரம் எதிர்பாராத செலவுகளும் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயிகள் பால் வியாபாரத்தில் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் உட்கட்சிப் பூசல்களிலிருந்து தப்பித்து விடுவீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் ஒத்துழைப்பு நிரம்பக் கிடைக்கும்.
பெண்களின் கோரிக்கைகளை கணவர் நிறைவேற்றுவார். மாணவர்கள் ஆசிரியர்கள் சொல் கேட்டு நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். பாகப்பிரிவினை விஷயங்களில் பொறுமையைக் கையாள வேண்டி வரும்.
உத்தியோகஸ்தர்களுக்குச் சிறப்பான வருமானம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும். விவசாயிகள் சக விவசாயிகள் மத்தியில் செல்வாக்கு கூடக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சியில் மதிப்பு மரியாதை உயரக் காண்பீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த பணவரவைக் காண்பீர்கள். பெண்கள் கணவரின் குடும்பத்தாரிடம் அனுசரித்து நடந்துகொள்வீர்கள்.
மாணவர்கள் சக மாணவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - அக்டோபர் 9, 10.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். சுபகாரியப் பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள். வியாபாரிகள் புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். விவசாயிகள் மானிய விலையில் உரங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்துக்குத் தகவல் அனுப்பும் பொழுது கவனமாக இருப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - அக்டோபர் 11, 12, 13.
Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week (October 9 - 15). Read and benefit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.