FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வாரப் பலன்கள்

அதிர்ஷ்டம் தேடி வரும்! வார ராசி பலன்கள் (நவ. 13 - 19)

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. வார ராசி பலன்கள்

13 நவம்பர் 2026, 2:07 pm
வார பலன்கள்
பகிர்:

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (நவ. 13 - 19) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

1

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

எடுத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரிகள் பொருள் விற்பனையில் கவனமாக இருப்பீர்கள். விவசாயிகள் நீர் வரத்து அதிகரிப்பதால், பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

Advertisement

Advertisement

அரசியல்வாதிகள் சமூகத்தில் பிரபலம் அடைவீர்கள். கலைத்துறையினரை புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். பெண்கள் குழப்பங்களைத் தவிர்க்க தியானம் போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

2

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

புதிய உபகரணங்களை வாங்கி தொழிலில் லாபம் அடைவீர்கள். இழுபறியான செயல்களையும் வெற்றியுடன் முடித்து விடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளை பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் புதிய நுட்பங்களைப் புகுத்தி பாராட்டு பெறுவீர்கள். பெண்கள் கணவரை அனுசரித்து நடந்துகொண்டு காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். மாணவர்களின் மதிப்பு பள்ளியில் உயரும்.

சந்திராஷ்டமம் - நவம்பர் 13, 14.

3

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். முதலீடுகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் அன்பு, ஆதரவைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்குத் தோட்டம், தோப்பு உள்ளிட்ட விவசாயங்கள் நல்லபடியாக முடியும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு செயலாற்றுவீர்கள். பெண்கள் ஆலயத் திருப்பணிகளில் கலந்துகொள்வீர்கள். மாணவர்கள் புதிய விளையாட்டுப் பயிற்சிகளில் கலந்துகொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - நவம்பர் 15, 16, 17.

4

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உடன்பிறந்தோருடன் மனம் விட்டுப் பேசி தெளிவுகளை உண்டாக்குவீர்கள். வாகனங்களுக்கு பராமரிப்புச் செலவு செய்ய நேரிடும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்கு வேலை நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பீர்கள். வியாபாரிகள் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். விவசாயிகள் எதிர்பார்த்த மகசூலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி ரீதியான பயணங்களை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். கலைத்துறையினர் ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்வீர்கள். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் புதிய பாடப்பிரிவுகளில் சேர்வீர்கள்.

சந்திராஷ்டமம் - நவம்பர் 18, 19.

5

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

பண வரவு நன்றாக இருக்கும். அதே நேரம் சிலர் குழந்தைகளுக்காக செலவு செய்ய நேரிடும். பெற்றோருக்கு உதவிகரமாக இருப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சுமை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் சிறு சிரமங்கள் உண்டாகும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் சிறப்பாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு சுமாராகவே இருக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கை நழுவிப் போகலாம். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே தொடரும். மாணவர்கள் படிப்பில் போதிய கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

6

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்றார் உறவினர் உதவிகரமாக இருப்பார்கள்.

உத்தியோகஸ்தர்கள் கடினமான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்திடம் அதிகம் நெருங்க மாட்டீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்தால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். பெண்கள் குடும்பத்தில் பொறுமையுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் புதிய யுக்திகளைக் கடைப்பிடிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

7

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

இல்லத்துக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உங்களின் சாதுர்மான பேச்சினால் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். வியாபாரிகள் கூட்டாளியுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். விவசாயிகள் கொள்முதலில் லாபத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினரிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவீர்கள். பெண்கள் கணவர் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் பெற்றோரின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

8

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

விரும்பிய பணிகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக இருப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடையும். விவசாயிகள் சக விவசாயிகளிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். கலைத்துறையினரின் முயற்சிகளை அனைவரும் பாராட்டுவார்கள். பெண்களுக்கு கணவனால் அன்பு, பாசம் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

9

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். எதிரிகளின் பலம் குறையும். குடும்பத்தில் சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரிகள் விற்பனைப் பிரதிநிதிகளை பல இடங்களுக்கு அனுப்பி, விற்பனையைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் பலன் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் துறையில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெறுவீர்கள். பெண்கள் உடல்நலத்தில் கவனமாக இருப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

10

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் கூடும். வழக்குகளில் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் மக்கள் விரும்பும் பொருள்களை வாங்கி விற்பனை செய்யத் தொடங்குவீர்கள். விவசாயிகள் ஊடுபயிர்களைப் பயிரிட்டு லாபமடைவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் ஏற்றுக்கொண்ட பதவிகளில் திறம்படச் செயலாற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு கடின முயற்சிகளுக்குப் பிறகு புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பெண்கள் புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

11

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பண வரவுக்கு குறைவு ஏற்படாது. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தேடித் தரும்.

உத்தியோகஸ்தர்களிடம் சக ஊழியர்கள் நட்போடு பழகுவார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடமிருந்து விலகி தனித்துச் செயல்படுவீர்கள். விவசாயிகள் கொள்முதலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களால் பெருமைப்படுத்தப்படுவீர்கள். பெண்களுக்கு பொருளாதாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை தென்படும். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் தைரியமாக ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

12

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உற்றார் உறவினர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி வரும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் சாதகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். விவசாயிகள் நீர்ப் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரிடம் நல்ல உறவைப் பேணுவீர்கள். கலைத்துறையினர் புதிய துறை சார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். பெண்களுக்கு கணவருடன் நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கும். மாணவர்கள் சிறப்பாகத் தேர்ச்சி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

summary

Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week (November 13 - 19). Read and benefit.