✕
முகப்பு
வாரப் பலன்கள்

அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் கைகூடும்! வார ராசி பலன்கள் (நவ. 20 - 26)

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. வார ராசி பலன்கள்

20 நவம்பர் 2026, 12:54 pm
வார ராசி பலன்கள்
பகிர்:

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (நவ.20 - 26) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

1

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

அனைத்துக் காரியங்களிலும் விவேகத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சிகரமான செய்தி வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகச் சூழலில் மாற்றங்களைக் காண்பீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ஏற்றம் காண்பீர்கள். விவசாயிகள் விவசாயப்பணிகளில் சிந்தித்துச்செயல்படுவீர்கள்.

Advertisement

Advertisement

அரசியல்வாதிகள் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்வீர்கள். கலைத்துறையினரின் செயல்கள் சிறிது தாமதத்துக்குப் பிறகே நிறைவேறும். பெண்கள் நவீனப் பொருள்களை வாங்குவீர்கள். மாணவர்கள் உள்விளையாட்டுகளில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

2

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

முக்கியமான விஷயங்களில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். எண்ணிய சில செயல்கள் அலைச்சலுக்குப் பிறகே நிறைவேறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரிகளுக்கு மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் கூடும். விவசாயிகள் விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் உறுதியுடன் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு சாதகமான சூழல் நிலவும். பெண்கள் உடல் ஆரோக்கியம், மனவளம் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக்கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் உயர்வான இடத்தை எட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

3

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

நீண்டநாள் ஆசை நிறைவேறுவதற்கான தருணம் அமையும். பூர்விக சொத்துகளில் இருந்து லாபம் வரத்தொடங்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பொறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரிகள் விமர்சனங்களைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். விவசாயிகள் சக விவசாயிகளுக்கு உதவி செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். பெண்கள் கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்று வருவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

4

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

சிந்தனையில் தெளிவு பிறக்கும். தொழிலில் இலக்குகளை எட்டுவீர்கள். குடும்பப் பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரிகள் விற்பனையில் கூடுதல் வருவாய் காண்பீர்கள். விவசாயிகளுக்கு விவசாயப் பணிகளில் ஆதரவான சூழ்நிலை காணப்படும்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் ஆலோசனைப்படி நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் எதிர்பாராத பணவரவைக் காண்பீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் சிறு விவாதங்கள் தோன்றி மறையும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் அறிவுரைகள் மாற்றத்தை ஏற்படுத்தும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

5

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

புதிய முயற்சிகளில் கவனமாக இருப்பீர்கள். தொழிலில் சீரான வருமானம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களின் செல்வாக்கு அலுவலகத்தில் உயரும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு ஆதாயமான நிலைமை தென்படும்.

அரசியல்வாதிகள் உற்சாகத்துடனும், கவனத்துடனும் நடந்து கொள்வீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களிடம் மனஸ்தாபம் ஏற்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவீர்கள். பெண்கள் குடும்பத்துடன் விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். மாணவர்களின் முயற்சிகளுக்கு பெற்றோர் ஆதரவு தருவார்கள்.

சந்திராஷ்டமம் - நவம்பர் 20, 21.

6

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பழைய நினைவுகள் உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களின் முயற்சிகளுக்கு ஏற்ப பலன் கிடைக்கும். வியாபாரிகள் சொல்லிலும் செயலிலும் நம்பகமாக இருப்பீர்கள். விவசாயிகள் பழைய குத்தகைப்பாக்கிகளைத் திருப்பிச் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களைப் புரிந்து நடந்து கொள்வீர்கள். கலைத்துறையினர் துறையில் மூத்தோரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். பெண்களின் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியர் சொல் கேட்டு நடந்துகொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - நவம்பர் 22, 23.

7

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

எடுத்த முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் புதுமையைப் புகுத்துவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பீர்கள். விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளை சரியான நேரத்தில் பயன்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரை மதித்து நடந்து கொள்வீர்கள். கலைத்துறையினர் துறை ரீதியான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். பெண்கள் கணவர் குடும்பத்தாரிடம் ஒற்றுமையுடன் பழகுவீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

சந்திராஷ்டமம் - நவம்பர் 24, 25.

8

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வருமானம் படிப்படியாக உயரும். தொழிலில் புதிய நுணுக்கங்களைப் புகுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய சந்தைகளில் பொருள்களை விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் விளைச்சலால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கலைத்துறையினர் கூடுதல் முயற்சியின்பேரில் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்களுக்குப் பொருளாதாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை தென்படும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் ஈடுபாடு காட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - நவம்பர் 26.

9

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தோற்றத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். மற்றபடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நட்போடு பழகுவார்கள். வியாபாரிகள் அதிக விற்பனையாகும் பொருள்களை விற்று லாபம் அடைவீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினரின் திறமைக்கு சவால்கள் வரலாம். பெண்களுக்கு உறவினர்களிடம் நிலவி வந்த மனக்கசப்பு நீங்கும். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

10

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மூத்தோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். வியாபாரிகள் புதிய கூட்டாளிகளைச் சேர்த்துக் கொள்வீர்கள். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளிடம் எதிரிகள் அடங்கியே நடப்பார்கள். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும்.

பெண்கள் ஆன்மிகத்திலும் திருமண காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் சாதனை செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

11

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பண வரவு அதிகரிக்கும். அனுகூலமான செய்தி ஒன்று வந்து சேரும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். உங்கள் செயல்களை திறம்படச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு குறையும். வியாபாரிகள் போட்டி பொறாமைகளைச் சந்திக்க நேரிடும். விவசாயிகளுக்கு கொள்முதல் அதிகமாக இருந்தாலும் லாபம் குறைவாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் அந்தஸ்து உயரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பெண்கள் புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

12

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பண வரவு அதிகரிக்கும். அனுகூலமான செய்தி ஒன்று வந்து சேரும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். உங்கள் செயல்களை திறம்படச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு குறையும். வியாபாரிகள் போட்டி பொறாமைகளைச் சந்திக்க நேரிடும். விவசாயிகளுக்கு கொள்முதல் அதிகமாக இருந்தாலும் லாபம் குறைவாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் அந்தஸ்து உயரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பெண்கள் புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

summary

Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week (November 20 - 26). Read and benefit.