பணவரவு உயருமா? உங்க ராசிக்கு என்ன பலன்? வார ராசி பலன்கள் (நவ. 27 - டிச. 3)
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. வார ராசி பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (நவ. 27 - டிச. 3) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
உற்றார், உறவினர், நண்பர்களிடம் ஒற்றுமையாகப் பழகுவீர்கள். முயற்சிக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். எவருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வியாபாரிகள் விற்பனையில் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிப் பெறுவீர்கள்.
Advertisement
Advertisement
அரசியல்வாதிகள் கட்சிப் பிரசாரங்களில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் துறையில் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு உடல் நலம், மனவளம் இரண்டும் மேலோங்கும். மாணவர்கள் புதிய உயர்கல்வியில் சேர்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
வருமானம் சீராகத் தொடரும். பூர்விக சொத்தில் ஆதாயம் உண்டாகும். சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் கைகூடும்.
உத்தியோகஸ்தர்களின் வேலைப்பளுவை சக ஊழியர்கள் பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரிகள் விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். விவசாயிகள் கூடுதல் விளைச்சலால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கலைத்துறையினர் துறையில் இருந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பெண்கள் உற்றார், உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் சக நண்பர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
பண வரவு அதிகரிக்கும். அனுகூலமான செய்தி ஒன்று வந்து சேரும்.
உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்றுவார்கள். வியாபாரிகள் போட்டி, பொறாமைகளை சாதுரியத்துடன் சமாளிப்பீர்கள். விவசாயிகள் கொள்முதலில் சராசரிக்கும் கூடுதலாக லாபத்தைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் உரங்களுக்கு அரசாங்க மானியத்தைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களே புதிய ஒப்பந்தங்களைப் பெற்றுத் தருவீர்கள்.
பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
குடும்ப ரகசியங்களைக் காப்பாற்றுவீர்கள். அசையா சொத்து வாங்க முன்பணம் கொடுப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் தனித்து முடிவு செய்து, வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளை சரியான நேரத்தில் பயன்படுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சியில் கெளரவம் குறையாமல் பார்த்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் விருப்பத்துக்கேற்பச் செயல்படுவீர்கள். பெண்கள் புத்தாடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் பாடங்களை உடனுக்குடன் மனப்பாடம் செய்து படிப்பில் உயர்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
தொழிலில் முன்னேற்றகரமான சூழ்நிலை காணப்படும். பெரியோர்களின் ஆலோசனை நல்ல தீர்வாக அமையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சிறிது தாமதத்துக்குப் பிறகே முடிவடையும். வியாபாரிகள் கொள்முதலில் சீரான லாபத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளின் நட்பைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பைப் பெறுவீர்கள். பெண்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்துவார்கள். மாணவர்கள் தேகப் பயிற்சிகளைச் செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
வருமானம் அதிகரிப்பதால் சேமிப்புகள் உயரும். பூர்விக சொத்துகளில் ஆதாயம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களின் தனித்திறமை மேம்படும். வியாபாரிகள் புதிய ஊர்களில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் காய்கறிகளைப் பயிரிட்டு அளவான வருமானத்தைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் துறையில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் விளையாட்டில் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கையிருப்புப் பொருள்களைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் இழுபறியான வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் பிரச்னைக்குத் தீர்வு வழங்குவீர்கள். வியாபாரிகள் விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்வீர்கள். கலைத்துறையினர் புதிய கலைகளைக் கற்றுக் கொள்வீர்கள். பெண்களிடம் பெருந்தன்மை வெளிப்படும். மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
செய்கின்ற முயற்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தோரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தொழில் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் காணப்படும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் கவனமாகப் பேசுவீர்கள். வியாபாரிகள் எதிர்வரும் போட்டிகளைச் சந்திப்பீர்கள். விவசாயிகள் அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்வீர்கள். பெண்கள் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கக் காண்பீர்கள். மாணவர்கள் பெரியோரை மதித்து நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - நவம்பர் 27.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் இருந்த சஞ்சலங்கள் குறைந்து தெளிவு உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரியிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள். வியாபாரிகள் கடையை அலங்கரித்து வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். விவசாயிகள் சக விவசாயிகளை ஊக்கப்படுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்துக்குத் தகவல் அனுப்பும் பொழுது கவனமாக இருப்பீர்கள். கலைத்துறையினர் துறை ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். மாணவர்கள் பெற்றோரின் அறிவுரைகளைக் கேட்பீர்கள்.
சந்திராஷ்டமம் - நவம்பர் 28, 29.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். பொருளாதாரம் சீராக இருக்கும்.
உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் அவசியமான பொருள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வியாபாரம் செய்வீர்கள். விவசாயிகள் புதிய தானியங்களால் நல்ல மகசூலைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். கலைத்துறையினர் கவனத்துடனும் நிதானத்துடனும் நடந்து கொண்டு எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். பெண்களுக்குப் பணவரவு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் புதிய விளையாட்டுகளைக் கற்றுக்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - நவம்பர் 30, டிசம்பர் 1, 2.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சில முக்கியமான வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் புதியவர்களைக் கூட்டாளிகளாகச் சேர்த்துக் கொள்வீர்கள். விவசாயிகள் பயிர் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் வெளிப்படையாகப் பழக மாட்டீர்கள். கலைத்துறையினர் கர்வத்தை விட்டொழித்து திறந்த மனதுடன் பழகினால் புகழ் பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.
சந்திராஷ்டமம் - டிசம்பர் 3.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
வேலைத் தொந்தரவு அதிகரித்தாலும் முடிவில் வெற்றி காண்பீர்கள். வருமானம் படிப்படியாக உயரும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை திறன்படச் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் விற்பனைப் பிரதிநிதிகளால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் பொறுப்புடன் செயல்பட்டு தங்கள் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் துறையில் அபிவிருத்திக் காண்பீர்கள். பெண்கள் நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மாணவர்கள் புதிய பாடப் பிரிவுகளில் சேர்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.