வார ராசி பலன்கள் (செப். 18 - 24) 12 ராசிகளுக்கும்! ரிஷபத்துக்கு ஜாக்பாட்!
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. வார ராசி பலன்கள்
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (செப்டம்பர் 18 - 24) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிக் கொள்வீர்கள். பொருளாதாரம் ஏற்றமாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்களிடத்தில் சக ஊழியர்கள், நட்புக்கரம் நீட்டுவார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் வெற்றி பெற பாடுபட்டு உழைப்பீர்கள். விவசாயிகளுக்கு பழைய குத்தகைப் பாக்கிகள் வசூலாகும்.
Advertisement
Advertisement
அரசியல்வாதிகள் சிலருக்கு கட்சியில் புதிய பதவி கிடைக்கும். கலைத்துறையினர் சிக்கனமாக இருந்து தேவைகளை பூர்த்தி செய்துகொள்வீர்கள்.
பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் பெற்றோரின் ஆலோசனைகளை கேட்டு நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - செப்டம்பர் 18.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
வருமானம் படிப்படியாக உயரும். உங்கள் திறமைகள் வெளிப்படும். இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைச் சரியாகத் திட்டமிட்டுச் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளும் தேவையான உதவிகளைச் செய்வார்கள். விவசாயிகள் புதிய வகை பயிர்களைப் பயிரிட்டு சிறந்த விளைச்சலைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்கள் யோகா, பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக்கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - செப்டம்பர் 19, 20.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
தொழிலை மேன்மையாக நடத்துவீர்கள். குடும்பத்தில் சிறிய மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுடன் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் புதிய முயற்சிகளைச் செயல்படுத்த வேண்டாம். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகி நல்ல லாபம் கிட்டும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்த்திடுங்கள். கலைத்துறையினர் கலைப்பயணங்களைச் செய்ய நேரிடும்.
பெண்கள் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - செப்டம்பர் 21, 22, 23.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அரசு விஷயங்களில் அனுகூலமான போக்கு காணப்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் குறையும். வியாபாரிகள் தனித்து முடிவு எடுத்து வெற்றி பெறுவீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகை எடுத்தல், புதிய நிலங்களை வாங்கும் யோகம் உண்டாகும்.
அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரை அரவணைத்துச் செல்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.
பெண்களுக்கு கணவருடான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்கள் கூடுதலாக உழைத்து படித்து அதிக மதிப்பெண்களை எடுப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - செப்டம்பர் 24.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
அனைத்திலும் விடாப்படியாகச் செயல்படுவீர்கள். வங்கிக் கடன் பெற்று தொழிலை மேம்படுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகச் சூழல்களில் புதிய மாற்றத்தைக் காண்பீர்கள். வியாபாரிகள் அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பீர்கள். விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சந்தையில் நல்ல விலை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களைக் காப்பாற்றுவீர்கள். கலைத்துறையினர் புதிய பயிற்சிகளைக் கற்றுக்கொள்வீர்கள்.
பெண்கள் இல்லத்தில் சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். மாணவர்கள் சோம்பேறித்தனத்தைத் தவிர்த்து சுறுசுறுப்பைக் கூட்டிக் கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் மருத்துவச் செலவு குறையும். வெளியில் கொடுத்திருந்த கடன்கள் வசூலாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரிகள் விற்பனையைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் போட்டிகளை சாதுர்யத்துடன் சமாளித்து லாபம் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களை கட்சிப் பணிகளில் ஈடுபட வலியுறுத்துவீர்கள். கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைக்கும்.
பெண்கள் கூடுதல் வருமானத்தில் ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் தியானம் போன்றவைகளை செய்து ஆத்ம பலத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
தொழிலில் இழுபறியாக இருந்த விஷயங்களில் முடிவைக் காண்பீர்கள். சமூகத்தில் உங்கள் கெüரவம், அந்தஸ்து உயரும்.
உத்தியோகஸ்தர்கள் துணிச்சலுடன் காரியமாற்றி நற்பெயர் வாங்குவீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைப் பராமரிப்புச் செலவு உருவாகும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு விடாமுயற்சி கை கொடுக்கும்.
பெண்கள் குழந்தைகளால் ஏற்படும் சிறிய பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
மனதில் புதிய நற்சிந்தனைகள் உருவாகும். பொருளாதாரம் உயரத் தொடங்கும். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் போனஸ் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகள் கடுமையாக உழைத்து லாபம்கூடக் காண்பீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களின் ஒத்துழைப்புடன் ரசிகர்களுக்கு உதவி செய்வீர்கள்.
பெண்கள் அன்புடன் பழகி அனைவரையும் கவர்வீர்கள். மாணவர்கள் ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
குடும்ப உறுப்பினர்கள் உங்கள் முயற்சிகளுக்கு சாதகமாக இருப்பார்கள். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உங்களின் தன்னம்பிக்கை வளரும்.
உத்தியோகஸ்தர்கள் புதிய வேலைகளுக்கு முயற்சி செய்வீர்கள். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். விவசாயிகளின் கடின உழைப்பால் பணிகளில் மேன்மை ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றகரமான சூழ்நிலை உருவாகும். கலைத்துறையினர் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றிவாகைச் சூடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
சூழ்நிலைகளுக்கேற்பச் செயல்படுவீர்கள். சுபச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடன் உதவி கிடைக்கும். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
அரசியல்வாதிகள் முக்கிய விஷயங்களில் எடுக்கும் முடிவுகள் சாதகமாக அமையும். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.
பெண்கள் உற்றார் உறவினர்கள் இல்லங்களுக்குச் சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். மாணவர்கள் பெற்றோர்களின் சொல் கேட்டு நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
தொழிலில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் முடிவு பயனுள்ளதாக அமையும். பொருளாதார நிலைமை சீராக இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைத் தேடிப்பெறுவீர்கள்.
பெண்கள் ஆன்மிகம், தியானம் போன்றவற்றில் ஆர்வம் அதிகரிக்கக் காண்பீர்கள். மாணவர்கள் மனக்குழப்பங்களில் இருந்து விடுபட்டு தெளிவாகச் சிந்திப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பெரியோர்களின் ஆலோசனை புதிய மாற்றத்தை உண்டாக்கும். குடும்பத்தில் மழலைப்பேறு உருவாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் பளு கூடும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வீர்கள். விவசாயிகளின் பொருள்களுக்கு சந்தையில் மதிப்பு உயரும்.
அரசியல்வாதிகள் மேலிடத்தில் கவனத்தை ஈர்ப்பீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
பெண்கள் ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week (September 18 - 24). Read and benefit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.