வார ராசி பலன்கள் (ஆக. 7 - 13) 12 ராசிகளுக்கும்! அதிர்ஷ்டம் கைகூடும் இந்த ராசிக்கு!
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை ஆகஸ்ட் 7-13) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
வெளியிலிருந்து சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். இடையூறுகளை சமாளித்துவிடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் புதிய விளைநிலங்களை வாங்குவீர்கள்.
Advertisement
Advertisement
அரசியல்வாதிகளுக்கு கட்சிப் பிரசாரங்களில் சிறிது அலைச்சல் கூடும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே இருக்கும்.
பெண்கள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் தேவையில்லாத வீண் பிரச்னையைத் தவிர்த்து விடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
அரசு அதிகாரிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளில் பொருள்களை விற்பீர்கள். விவசாயிகள் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் ரகசியத் திட்டங்களைத் தீட்டுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெற கடுமையாகப் போட்டி போடுவீர்கள்.
பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் கவனமாக இருப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
ஓய்வு இல்லாமல் உழைத்து கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிடுவீர்கள். பிதுர் வழி சொத்துகளில் இருந்து வருமானம் வரத் தொடங்கும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ஒற்றுமையாகப் பழகுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது கவனம் செலுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் மக்கள் நலப் பணிகளில் கவனத்துடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் ஆதரவுடன் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள்.
பெண்களுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடும். தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். சேமிப்புகளை உயர்த்திக்கொள்ளுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் சில சிரமங்கள் ஏற்படினும், பெரிய பாதிப்பு ஏற்படாது. வியாபாரிகளுக்கு சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளித்துவிடுவீர்கள். விவசாயிகள் லாபம் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளின் செல்வாக்கு கட்சியில் உயரும். கலைத்துறையினர் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். பெண்கள் பேச்சில் கவனமாக இருப்பீர்கள். மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
செயற்கரிய சாதனைகளை செய்து புகழடைவீர்கள். பங்கு வர்த்தகத்தில் சிறிய வருமானம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகள் புதிய கூட்டாளிகளைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.
அரசியல்வாதிகளின் கடந்த கால உழைப்புக்கு தற்சமயம் பலன் கிடைக்கும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். மாணவர்கள் ஆர்வத்துடன் உழைத்து மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
வருமானம் இரட்டிப்பாகும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளைத் திட்டமிட்டுச் செய்து பெயரெடுப்பீர்கள். வியாபாரிகளின் பிரதி நிதிகள் பல இடங்களுக்குச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் குத்தகை எடுப்பது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப் பிரசாரத்துக்காக நேரம் ஒதுக்குவீர்கள். கலைத்துறையினருக்கு பணவரவு சீராக இருக்கும். பெண்கள் யோகா, பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக்கொள்வீர்கள். மாணவர்களின் கோரிக்கைகள் யாவும் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
சமூகத்தில் கெüரவம் கூடும். உற்றார், உறவினர்களிடம் இருந்த பகைமை மறையும். இன்று அதிர்ஷ்டம் கைகூடும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் இணக்கமாகப் பழகுவீர்கள். வியாபாரிகள் தனித்து வியாபாரம் செய்து வருமானத்தைக் கூட்டுவீர்கள். விவசாயிகள் அமோக விளைச்சலைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் அனுகூலமாக நடந்துகொள்ளும். கலைத்துறையினருக்கு துறையில் எதிர்பாராத அங்கீகாரம் கிடைக்கும்.
பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு, மரியாதை உயரும். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 7, 8.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
தொழிலில் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். தரும காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கடன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் சீரான நிலையைக் காண்பீர்கள். விவசாயிகள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் திறமையாகச் செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்படுவீர்கள்.
பெண்களுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் உடற்பயிற்சிகளைச் செய்து, ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 9, 10.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
உடல் ஆரோக்கியம், மனவளம் இரண்டும் சிறப்பாக இருக்கும். நெருங்கிய உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் நிறையும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களைச் செய்வீர்கள். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் கொட்டும்.
அரசியல்வாதிகள் வீண் விவாதங்களைத் தவிர்ப்பீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தாமாகவே தேடி வரும். பெண்கள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 11, 12.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் புதிய வேலைக்கு மாறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகள் கொள்முதலில் சிறப்பான லாபத்தைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் கொடுத்த பொறுப்புகளை மிக்க கவனத்துடன் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகும். பெண்களுக்கு அனைவரும் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். மாணவர்கள் சக மாணவர்களுடன் கால நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 13.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
குழந்தைகளின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள். பெற்றோருடன் பிறந்தோர் ஆதரவு சிறப்பாகத் தொடரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் சற்று மந்தமாக இருக்கும்.
அரசியல்வாதிகள் முரட்டுப் பிடிவாதத்தையும், முரண்பாடான யோசனைகளையும் விட்டொழிப்பீர்கள். கலைத்துறையினர் நல்ல வருமானம் தரும் ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.
பெண்கள் கணவரிடம் அன்பு, பாசத்துடன் பழகுவீர்கள். மாணவர்கள் படிப்பில் அக்கறையோடு செயல்படுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பெற்றோர், உடன் பிறந்தோர் ஆதரவு சிறப்பாகத் தொடரும். உடல் உபாதைகள் நீங்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் கூடுதல் வருமானம் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு அனாவசிய அறிவுரை வழங்க வேண்டாம். கலைத்துறையினர் ரசிகர் மன்றத்துக்கு சிறிது செலவு செய்து மகிழ்வீர்கள். பெண்கள் பெரியோர் ஆசிகளைப் பெறுவீர்கள்.
மாணவர்கள் ஞாபக சக்தி வளர விடியற்காலையில் கல்விக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week (August 7-13). Read and benefit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.