முகப்பு
எண் ஜோதிடம்

ஜூலை மாத எண்கணித பலன்கள் – 4

எண்கணிதப்படி இந்த மாதம் உங்களுக்கு எப்படி?

பகிர்:

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தொழில் முன்னேற்றத்தில் அதிக ஆர்வம் கொண்ட நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும். தொழிலில் நன்மையே அடைவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். எதிர்நோக்கியியிருந்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். புதியதாக வீடு கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும்.

Advertisement

Advertisement

பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. கலைத்துறையினர்கள் கவனமாக பேசுவது நல்லது.  அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு  இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.

பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments