ஜூன் மாத எண்கணித பலன்கள் – 4
எண்கணிதப்படி இந்த மாதம் உங்களுக்கு எப்படி?
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
நடையிலும் செயலிலும் வேகம் உடைய நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் உங்கள் வாழ்க்கை தரம் உயர நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள்.
தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும்.
Advertisement
Advertisement
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வழக்கத்தை விட செலவு கூடும்.
அரசியல்வாதிகள் வாக்கு கொடுக்கும் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.
பரிகாரம்: தினமும் அம்மனை வழிபாடு வர உத்தியோகத்தில் மேன்மை கிடைக்கும். மனதில் இருந்த குழப்பத்திற்கு விடை கிடைக்கும்.