மே மாத எண்கணித பலன்கள் – 9
எண்கணிதப்படி இந்த மாதம் உங்களுக்கு எப்படி?
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என செயல்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்ன சின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம்.
Advertisement
Advertisement
அரசியல்வாதிகளுக்கு சில நற்பலன்களை வந்தாலும் மனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். கலைத்துறையினருக்கு பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கவனத்தை சிதற விடாமல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: மஹாலக்ஷ்மியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.