ஜூன் மாத எண்கணித பலன்கள் – 9
எண்கணிதப்படி இந்த மாதம் உங்களுக்கு எப்படி?
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
கொண்ட கொள்கையில் மாறாத ஒன்பதாம் எண் அன்பர்களே நீங்கள் தன்மானம் அதிகம் உடையவர். இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல லாபம் பார்ப்பார்கள். வரவேண்டிய பாக்கிகள் தாமாக வந்து சேரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுத்த வேலையை சரியான நேரத்தில் முடித்து பாராட்டினைப் பெறுவீர்கள். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம்.
Advertisement
Advertisement
பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. கலைத்துறையினருக்கு எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும்.
அரசியல்வாதிகள் வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.
பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லி வழிபாடு வர ஆரோக்கியத்தில் மேம்பாடு கிடைக்கும்.