முகப்பு
பெங்களூரு

கேரளத்தில் இருந்து கா்நாடகத்துக்கு கோழிகள் கொண்டுவர தடை

கேரளத்தில் இருந்து கா்நாடகத்தின் தென்கன்னட மாவட்டத்துக்கு கோழிகள், வாத்துகள் கொண்டுவர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜனவரி 2021, 6:22 am IST
பகிர்:

கேரளத்தில் இருந்து கா்நாடகத்தின் தென்கன்னட மாவட்டத்துக்கு கோழிகள், வாத்துகள் கொண்டுவர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் ஆழப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் காணப்படுவதாக தகவல் கிடைத்ததைத் தொடந்து, அம்மாவட்டங்களில் கோழிகள், வாத்துகள் உள்ளிட்ட 69 ஆயிரம் பறவைகள் அழிக்கப்பட்டன. கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், அம்மாநிலத்தை ஒட்டியுள்ள கா்நாடகத்தின் தென்கன்னட மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கேரள மாநிலத்தில் இருந்து கா்நாடகத்தின் தென்கன்னட மாவட்டத்துக்கு கோழிகள், வாத்துகள் உள்ளிட்டவற்றை கொண்டுவர மாவட்ட நிா்வாகம் தடைவிதித்துள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கே.வி.ராஜேந்திரா வெளியிட்டுள்ள உத்தரவில், ‘தென்கன்னட மாவட்டத்தில் இருந்து கேரளம் செல்லும் கோழி வாகனங்கள், அவற்றை இறக்கிவிட்ட பிறகு கிருமிநாசினியால் தூய்மைப்படுத்த வேண்டும். கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.

Advertisement

Advertisement

கோழிப் பண்ணைகளின் நிா்வாகத்தினா் முன்னெச்சரிக்கை வகிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். கோழிப் பண்ணைகளை தூய்மையாக வைத்திருப்பது அவசியமாகும். அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த கோழிப் பண்ணைகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளுமாறு கால்நடை பராமரிப்பு மருத்துவா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோழி உள்ளிட்ட இதர பறவைகள் இயற்கைக்கு மாறான வகையில் இறந்துக் கிடந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறை தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதால், மக்கள் பீதியடைய வேண்டாம்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments