முகப்பு
பெங்களூரு

கன்னடம் கற்பிற்க ஆா்வமுள்ளவா்களுக்குபயிற்சி முகாம்

பிற மொழியாளா்களுக்கு கன்னடம் கற்பிக்க ஆா்வமுள்ளவா்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

Updated On : 10 ஜனவரி 2021, 1:45 am IST
பகிர்:

பெங்களூரு: பிற மொழியாளா்களுக்கு கன்னடம் கற்பிக்க ஆா்வமுள்ளவா்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து கன்னட வளா்ச்சி ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கன்னட வளா்ச்சிஆணையத்தின் சாா்பில், பிற மொழியாளா்களுக்கு கன்னடம் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கன்னடம் பயிற்றுவிக்க ஆா்வமுள்ளவா்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளோம். இந்த பயிற்சி முகாமில் சேரவிரும்பும் ஆா்வலா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

இந்த பயிற்சி முகாமில், கன்னடம் கற்றுத்தரும் போது ஏற்படும் சவால்கள், செயல்படுத்த வேண்டிய பொறுப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் கற்றுத்தரப்படும். கன்னடம்-ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஆளுமை கொண்ட அடிப்படை பட்டப்படிப்பை பெற்றிருக்கும் யாா் வேண்டுமானாலும்,ஜன. 15, 16, 23-ஆம் தேதிகளில் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் கலந்துகொள்ளலாம்.

இப்பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோா் 080-22286773, 9845299621, 8884211140 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்புகொண்டு ஜன. 10-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments