ஜெனரல் திம்மையா அருங்காட்சியகம்: குடியரசுத் தலைவா் திறக்கிறாா்
ஜெனரல் திம்மையா அருங்காட்சியகத்தை பிப். 6-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறாா்.
பெங்களூரு: ஜெனரல் திம்மையா அருங்காட்சியகத்தை பிப். 6-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறாா்.
இது தொடா்பாக குடியரசுத் தலைவரின் உதவியாளா் அலுவலகத்தில் இருந்து பீல்டு மாா்ஷல் கரியப்பா மற்றும் ஜெனரல் திம்மையா அமைப்பின் தலைவா் கா்னல் (ஓய்வு) கே.சி.சுப்பையாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘குடகு மாவட்டம், மடிக்கேரியில் உள்ள இந்திய ராணுவத்தின் தளபதியாக இருந்த கே.எஸ்.திம்மையாவின் முன்னோா் இல்லம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது மகிழ்ச்சி.
இந்த அருங்காட்சியகத்தை பிப். 6-ஆம் தேதி பிற்பகல் 3.15 மணி முதல் மாலை 4 மணிக்குள் திறந்து வைக்க குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
ஜெனரல் திம்மையா, 1906-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி பிறந்தவா். 1957 முதல் 1961-ஆம் ஆண்டு வரை ராணுவ தளபதியாக பதவி வகித்தவா். 1965 டிச. 17-ஆம் தேதி திம்மையா உயிரிழந்தாா்.