முகப்பு
வணிகம்

நிதி ஆண்டின் முதல் நாளில் பங்குச் சந்தையில் 29 புள்ளிகள் உயர்வு

2013-2014 நிதி ஆண்டின் முதல் நாளான திங்கள்கிழமை (ஏப்.1) மும்பை பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் 29 புள்ளிகள் உயர்ந்து

Updated On : 2 ஏப்ரல் 2013, 12:35 am IST
பகிர்:

2013-2014 நிதி ஆண்டின் முதல் நாளான திங்கள்கிழமை (ஏப்.1) மும்பை பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் 29 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் குறியீட்டெண் 18,864 என்ற அளவில் நிலைத்தது.

இன்ஃபோசிஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்கள் இடையே வரவேற்பை பெற்றன. கட்டுமானத் துறை நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கும் ஆர்வம் காட்டினர். ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் குறியீட்டெண் 18,959 என்ற அளவைத் தொட்டது; வர்த்தகம் முடிவுற்ற நிலையில் சற்று தாழ்ந்து 18,864 என்ற அளவில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி குறியீட்டெண் 21 புள்ளிகள் உயர்வுபெற்றது. வர்த்தகம் முடிவுற்றபோது 5,704 என்ற அளவில் நிஃப்டி நிலைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.